T20I தரவரிசையில் முன்னேறிய பெதும்; முதல் 10 இடங்களில் இரு இலங்கை வீரர்கள்

ICC T20I Rankings

35
Nissanka-Kusal

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய T20I துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் இலங்கை அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்.

நடைபெற்றுமுடிந்த ஆசியக்கிண்ண தொடரில் சதமடித்து அசத்தியிருந்த பெதும் நிஸ்ஸங்க இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துக்கொண்டுள்ளார்.

>>ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ணம்; இந்தியாவுடன் இலங்கை தோல்வி<<

பெதும் நிஸ்ஸங்க இந்திய அணிக்கு எதிராக சதம் விளாசியிருந்ததுடன், மொத்தமாக 261 ஓட்டங்களை விளாசியிருந்தார். இந்த பிரகாசிப்பின் அடிப்படையில் இவர் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதேநேரம் இந்திய அணிக்கு எதிரான கடைசி ஆசியக்கிண்ணப் போட்டியில் அரைச்சதம் விளாசிய குசல் பெரேரா 11வது இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 9வது இடத்தை பிடித்துள்ளார்.

இதேவேளை இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா இதேவேளை இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா T20I வரலாற்றில் அதிகூடிய மதிப்பீட்டு புள்ளிகளுடன் (931) முதல் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முதல் இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் 919 மதிப்பீட்டு புள்ளிகளை ஏற்கனவே பெற்றிருந்தார்.

அத்துடன் புதிய T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தையும், சகலதுறை வீரர்கள் வரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி பாகிஸ்தானின் சயும் ஆயுபும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<