2025ஆம் ஆண்டு கரீபியன் பிரிமியர் லீக் (CPL) T20 தொடரில் பங்கெடுக்கும் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியின் தலைவராக அதிரடி துடுப்பாட்ட வீரரான நிகோலஸ் பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
>>மே.தீவுகள் செல்லும் இலங்கை U19 கிரிக்கெட் அணி<<
2019 தொடக்கம் CPL தொடரின் ஆறு பருவங்களில் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் பொறுப்பினை ஏற்றிருந்த, கெய்ரோன் பொலார்ட்டின் தலைவர் பதவியினை நிகோலஸ் பூரன் பிரதியீடு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்துடன் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பில் சிம்மன்ஸிற்குப் பதிலாக, ட்வெய்ன் பிராவோ நியமனம் செய்யப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில் 17 வயதில் அறிமுகம் பெற்ற பூரன் இதுவரை உலகின் பல்வேறு T20 லீக்குகளில் பங்கேற்று அவற்றில் 9000 இற்கு கிட்டவான ஓட்டங்களை குவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நிகோலஸ் பூரன் தலைமையிலான ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணி தமது முதல் CPL போட்டியில், இம்மாதம் 17ஆம் திகதி சென் கிட்ஸ் & நெவில் பெட்ரியட்ஸ் உடன் மோதவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<