சிறப்பு பயிற்சியில் பயன்பெற்ற வலைப்பந்து பயிற்சியாளர்கள்

133

இலங்கை வலைப்பந்து சம்மேளனம் (NFSL), வலைப்பந்து பயிற்றுவிப்பாளர்களுக்கான தற்காலிக பயிற்சிப் பாடநெறி ஒன்றினை கடந்த 24, 25ஆம் திகதிகளில் தேசிய விளையாட்டு விஞ்ஞானத்துறை நிறுவனத்தில் முதல் முறையாக ஒழுங்கு செய்திருந்தது.

இந்தப் பயிற்சிப் பாடநெறியில் இலங்கையின் வலைப்பந்து, பாடசாலை வலைப்பந்து என்பவற்றினை விருத்தி செய்யும் நோக்கில் புதிய விடயங்கள் வலைப்பந்துப் பயிற்சியாளர்களுக்கு போதிக்கப்பட்டது.

Photos: Intermediate Coaching 2020 – Netball Federation of Sri Lanka

அந்தவகையில் வலைப்பந்து பயிற்சியாளர்கள் இந்தப் பாடநெறி மூலம் வலைப்பந்து விளையாட்டுக்கான உடல்நிலை, மனநிலையுடனான தயார்படுத்தல்கள், உபாதை முகாமைத்துவம், நிகழ்ச்சிகள் திட்டமிடல், திறன் விருத்தி மற்றும் அணி உத்திகள் போன்ற விடயங்களை கற்றுக்கொண்டனர். 

இதேநேரம், இந்தப் பயிற்சிப் பாடநெறியில் நாடெங்குமிலிருந்து 40 வலைப்பந்து பயிற்சியாளர்கள் வரையில் பங்கேற்று பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

 

அதேநேரம், இந்தப் பயிற்சிப் பாடநெறியின் ஆரம்ப நிகழ்வுக்கு விளையாட்டு விருத்தி நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் அமல் எதிரிசூரிய கலந்து கொண்டதோடு, இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் அதியுயர் செயற்திறன் பிரிவின் முகாமையாளராக இருக்கும் யசிந்த் விஜேசிங்க கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற வலைப்பந்து தொடர்களின் பகுப்பாய்வு அறிக்கையினை சமர்ப்பித்திருந்தார். 

 >>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<