நெய்மார் உட்பட பலருக்கு போட்டித் தடை

417
Neymar

மார்செய்ல் அணிக்கு எதிரான போட்டியில் சிவப்பு அட்டை பெற்ற பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மாருக்கு இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரின் இனரீதியான துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு குறித்து பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் விசாரணை நடத்தவுள்ளது.  

>> உலகின் செல்வந்த கால்பந்து வீரராக தொடர்ந்து நீடிக்கும் மெஸ்ஸி

கடந்த ஞாயிற்றுக்கிழமை பரபரப்பாக நடைபெற்ற லீக் 1 போட்டியில் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் மார்செய்ல் பின்கள வீரர் அல்வாரோ கொன்செலஸை நெய்மார் தாக்கியதை அடுத்து போட்டியில் குழப்பம் ஏற்பட்டதோடு 5 வீரர்களுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. 

போட்டியின்போது கொன்செலஸ் தம்மை நேரடியாக இனரீதியில் தாக்கியதாக நெய்மார் டுவிட்டரில் குற்றம்சாட்டி இருந்தார். வீடியோ உதவி நடுவர் முறையின் உதவியை பெற்று இது பற்றி விசாரணை நடத்தும்படி அவர் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார். எனினும் நெய்மாரின் குற்றச்சாட்டை கொன்செலஸ் நிராகரித்துள்ளார். 

இந்தப் போட்டியின்போது வெளியேற்றப்பட்ட அடுத்த நான்கு வீரர்களுக்கும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. PSG பின்கள வீரர் லெய்வின் குர்சாவுக்கு ஆறு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.  

>> Video – PSG இற்கு சண்டையுடன் மோசமான சாதனை ! | FOOTBALL ULAGAM

அவரது சக வீரரான லீன்ட்ரோ பரெடசுக்கு இரண்டு போட்டிகளிலும் மார்செய்லா, ஜோர்டன் அமாவி ஆகியோருக்கு மூன்று போட்டிகளில் தடையும் டாரியோ பெனடிட்டோவுக்கு ஒரு போட்டியில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் இந்த இரு வீரர்களுக்கும் இடையில் என்ன நடந்தது என்பது பற்றி வீடியோ காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று பிரான்ஸின் தொழில்முறை கால்பந்து நிர்வாக அமைப்பின் ஒழுக்காற்றுக் குழு குறிப்பிட்டுள்ளது. 

கொன்செலஸ் மீது எச்சில் துப்பியதாக மார்செய்ல் அணியினரால் குற்றம்சாட்டப்படும் டி மரியாவை அடுத்த வாரம் ஒழுக்காற்றுக் குழு முன் ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

>> PSG நட்சத்திரம் நெய்மார் மற்றும் இரு வீரர்களுக்கு கொவிட்-19

அல்வாரோ கொன்செலஸ் இனவாதி இல்லை என்று மார்செய்ல் அணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் நிலையில் தமது வீரர்களுக்கு ஆதரவு அளிப்பதாக PSG குறிப்பிட்டுள்ளது. 

கடும் தண்டனை ஒன்றை பெறும் அச்சம் இருந்த சூழலில் நெய்மாருக்கு இரண்டு போட்டிகளில் மாத்திரம் தடை கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கும் ஒன்றாகும். கடந்த புதன்கிழமை நடைபெற்ற மெர்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நெய்மார் விளையாடாத நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நைஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவரால் விளையாட முடியாதுள்ளது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<