சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி சற்று முன்னர் கண்டி பல்லேகலவில் ஆரம்பமாகியிருக்கின்றது.
தற்காலிக பயிற்சியாளரினை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் மிச்சல் சான்ட்னர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றுள்ளார்.
ஏற்கனவே நியூசிலாந்து ஒருநாள் தொடரினை 2-0 எனக் கைப்பற்றியிருக்கும் இலங்கை வீரர்கள் இப்போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கியிருக்கின்றனர். அத்துடன் இப்போட்டியில் இளம் சகலதுறைவீரரான சமிந்து விக்ரமசிங்க ஒருநாள் அறிமுகம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை XI
நிஷான் மதுஷ்க, அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே, சமிந்து விக்ரமசிங்க, மகீஷ் தீக்ஸன, ஜெப்ரி வன்டர்செய், மொஹமட் சிராஸ், டில்சான் மதுசங்க
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<