எமது வீரர்கள் வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் – ருமேஷ் ரத்னாயக்க

1519

நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுவதற்கு இன்னும் ஒருநாள் எஞ்சி இருந்தாலும், இலங்கை வீரர்கள் இந்தப் போட்டியை வெற்றி கொள்வதில் உறுதியாக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயக்க தெரிவித்தார்.

காலியில் நடைபெற்று வருகின்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் நேற்று (17) நிறைவுக்கு வந்தது

காலி மைதானத்தில் வரலாற்று வெற்றியை நோக்கி நகரும் இலங்கை!

நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச….

நேற்றைய நாள் ஆரம்பத்தின்போது, 7 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களுடன் நியூசிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்தது. வொட்லிங் 77 ஓட்டங்களையும், போல்ட் 26 ஓட்டங்களையும், வில்லியம் சொமர்வில் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

வெற்றி இலக்கான 268 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடும் இலங்கை சார்பாக திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஜோடி 133 ஓட்டங்களைப் பகிர்ந்தது. திமுத் கருணாரத்ன 67 ஓட்டங்களுடனும், லஹிரு திரிமான்ன 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.

போட்டியின் கடைசி நாளான இன்று (18) இலங்கை அணி 135 ஓட்டங்களை எடுத்தால் வெற்றிபெறும்

இந்த நிலையில், நேற்றைய போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை அணியின் இடைக்காலப் பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயக்க, இலங்கை அணியின் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

”இலங்கை அணியின் உடைமாற்றும் அறை மிகவும் வித்தியாசமாக உள்ளது. ஏனெனில், நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடிய போது அவர்களுடைய விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவது இலகுவான விடயமல்ல என்பதை எமது பந்துவீச்சாளர்களுக்கு சொல்லியிருந்தோம். நீங்கள் இந்தப் போட்டியைப் பார்த்தால் அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஓட்டங்களைக் குவித்தனர். அவர்களுடைய துடுப்பாட்ட வரிசையில் இறுதிவரை வந்த வீரர்கள் மிகப் பெரிய நெருக்கடியை எமது பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்தனர்

பங்களாதேஷ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளாக ரசல் டொமிங்கோ

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் புதிய….

நீங்கள் பார்த்தால் 6 விக்கெட்டுக்களை அவர்கள் இழந்த பிறகு 100இற்கும் அதிகமான ஓட்டங்களைக் குவித்தனர். கடைசி விக்கெட்டுக்களை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. எமக்குத் தெரியும் இது கடினமான விடயம் தான்

அதிலும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகவோ மத்திய வரிசை வீரர்களாகவோ அல்லது பின்வரிசை வீரர்களாகவோ யார் துடுப்பெடுத்தாட வந்தாலும் நிலைத்து நின்று விளையாடினால் அவர்களது விக்கெட்டுக்களை இந்த ஆடுகளத்தில் கைப்பற்றுவதென்பது கடினமானகும். அதுதான் இன்று இடம்பெற்றது

மறுபுறத்தில் நாங்கள் தற்போது துடுப்பெடுத்தாடி எந்தவொரு விக்கெட் இழப்புமின்றி 133 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டாலும், போட்டியின் கடைசி நாளில் தொடர்ந்து ஆட்டமிழப்பின்றி விளையாடுவதென்பது இலகுவான காரியம் இல்லை.

அதேபோல, அடுத்து வருகின்ற துடுப்பாட்ட வீரர்களுக்கும் ஓட்டங்களைக் குவிப்பது இலகுவாக இருக்காது. எனவே அதுதொடர்பில் நாங்கள் சற்று அவதானத்துடன் உள்ளோம்ஆனாலும், எமது வீரர்கள் அதற்கும் பயப்படாமல் முகங்கொடுத்து போட்டியில் எப்படியாவது வெற்றி பெறுவதற்கு தயாராக உள்ளனர். எமது வீரர்கள் மீண்டும் ஓரு தோல்வியை அடைவதற்கு தயாரில்லை. நாங்கள் பயப்படாமல் முன்னேறிச் செல்வோம்” என தெரிவித்தார்

இதேநேரம், திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்னவின் ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்டம் குறித்து அவர் பேசுகையில்

”உண்மையில் பாராட்டத்தக்கது. இவ்வாறான சூழ்நிலையில் 100 ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டமொன்றைப் பெற்றுக் கொள்வதென்பது மிகப் பெரிய சாதனையாகும். இவ்வாறான ஆடுகளங்களில் விக்கெட்டுக்களைப் பறிகொடுக்காமல் நிதானமாக விளையாடுவதையும் மிகப் பெரிய விடயமாக நான் கருதுகிறேன்உண்மையில் இந்த நாள் எமக்கு சாதகமாக அமைந்திருந்தது” என குறிப்பிட்டார்.

குறைந்த ஓட்டங்களுக்கு நியூசிலாந்தை கட்டுப்படுத்தினால் வெற்றி பெறலாம் – டிக்வெல்ல

நியூசிலாந்து அணியின் எஞ்சிய மூன்று….

இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ருமேஷ் ரத்னாயக்க பதிலளிக்கையில்

ஒரு பயிற்சியாளராக எமது பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் ஒருசில இடங்களில் நான் அதிருப்தி அடைகிறேன். தொடர்ந்து மோசமான பந்துகளை நாங்கள் வீசிய அதிகளவு ஓட்டங்களைக் கொடுத்திருந்தோம். என்னைப் பொறுத்தமட்டில் அதுவும் ஒரு கடினமான விடயம் தான்

உண்மையில் நியூசிலாந்து அணிக்காக இறுதியாக வந்த டிம் சௌத்தி, வொட்லிங் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தனர். இதனால் அவர்களுக்கு 285 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது

மறுபுறத்தில் நாங்கள் 266 ஓட்டங்களை துரத்தியடித்தால் இந்த மைதானத்தில் பெற்றுக் கொள்கின்ற மிகப் பெரிய வெற்றியாகும். எனவே, அதற்கான முதல் படியாக நாங்கள் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆட்டமிழப்பின்றி 133 ஓட்டங்களைக் குவித்துள்ளோம். எனவே, போட்டியின் கடைசி நாள் எமக்கு மிகவும் கடினமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு வழங்குகின்ற ஆலோசனை என்ன என்பது தொடர்பில் அவர் குறிப்பிட்ட போது, இவ்வாறான ஆடுகளங்களில் 10 நிமிடங்கள் நிலைத்திருந்து விளையாடுவது இலகுலான விடயமல்ல. ஆனாலும், பௌண்சர் பந்துகளைப் போல சுழல் பந்துகளையும் எதிர்கொண்டு யாராவது 20 அல்லது 30 பந்துகளை ஆட்டமிழக்காது விளையாடினால் நிச்சயம் அது எமக்கு சாதகமாக இருக்கும். எனவே பொறுமையாகவும், நிதானமாகவும் பந்துகளை எதிர்கொண்டு விளையாடினால் வெற்றி பெறுவதென்பது கடினமான விடயமல்ல” என தெரிவித்தார்

இலங்கையுடனான டெஸ்ட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்த டிம் சௌத்தி

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் புதிதாக….

போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் மத்திய வரிசை வீரர்கள் எதிர்பார்த்தளவு ஓட்டங்களைக் குவிக்க தவறியதற்கான காரணத்தையும் அவர் தெளிவுபடுத்தினார். 

உண்மையில் மத்திய வரிசையில் விளையாடுகின்ற வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழப்பது குறித்து நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். ஆனாலும், சுரங்க லக்மாலும், நிரோஷன் டிக்வெல்லவும் ஆடிய விதம் பாராட்டத்தக்கதுஅவர்கள் துடுப்பாடிய விதத்தை எமது வீரர்கள் நன்றாக அவதானிக்க வேண்டும். இதில் சுரங்க லக்மாலின் இன்னிங்ஸ் எமக்கு நம்பிக்கை கொடுத்தது. அதற்கு அவரை பாராட்ட வேண்டும்எனவே இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை எமது வீரர்கள் மிகவும் அவதானத்துடன் சிந்திக்க வேண்டும்” என்றார்.

இறுதியாக திமுத் கருணாரத்வின் தலைமைத்துவம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ருமேஷ் ரத்னாயக்க கருத்து தெரிவிக்கையில்

”உண்மையில் பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் விளையாடி, அணிக்கு மிகப் பெரிய பலத்தை கொடுக்கின்றார். அணியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு அவர் மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கி வருகின்றார்” என அவர் கூறினார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<