கிண்ணத்தை வெல்லாமல் நாட்டுக்கு வரவேண்டாம் – மெரடோனா

165
Maradona and Messi
 

கோபா அமெரிக்க கால்பந்து தொடர் தொடங்கி இந்த வருடத்தோடு 100 ஆண்டுகள் முடிவடைவதால், இதை சிறப்பிக்க சிறப்பான தொடர் இந்த வருடம் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (திங்கட்கிழமை விடியற்காலை 5.30 மணி) நடக்கவிருக்கிறது. இதில் தற்போதைய நடப்பு சாம்பியனான சிலி அணியும், தலைசிறந்த அணியுமான ஆர்ஜென்டினாவும் பலப்பரீட்சை நடத்தவிருக்கிறது.

ஐரோப்பியக் கிண்ண இறுதி 16 அணிகள்

பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஆர்ஜென்டினா இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து ஜெர்மனியுடன் கோப்பையை இழந்தது. அதேபோல் கடந்த கோபா அமெரிக்க கோப்பையை சிலியுடன் இழந்தது ஆர்ஜென்டினா.

தற்போது இந்தக் கிண்ணத்தை வாங்காமல் ஆர்ஜென்டினா அணி வீரர்கள் நாட்டிற்குள் வரக்கூடாது என்று கால்பந்து ஜாம்பவான் மெரடோனா கூறியுள்ளார்.

இதுகுறித்து மெரடோனா கூறுகையில் ‘‘நாங்கள்தான் உறுதியாகக் கிண்ணத்தை வெல்லுவோம். தவிர ஆர்ஜென்டினா கிண்ணத்தை வெல்லாவிடில், அவர்கள் நாட்டிற்குள் திரும்பக்கூடாதுஎன்று கூறியுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்