இந்திய தொடரின் பிறகு இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்

988
New Coach for Sri Lanka Cricket in 2018

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இவ்வருட இறுதியில் நிரந்த பயிற்சியாளர் ஒருவர் புதிதாக நியமிக்கப்படுவார் எனவும், இந்திய அணியுடனான தொடரின் பிறகு இதுதொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவின் பணிப்பாளர் ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார்.

இந்தியாவுடனான தொடரில் மெதிவ்ஸ், அசேல மற்றும் குசல் இலங்கை அணியில்

பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்திய ரசிகர்கள் கிரிக்கெட்..

பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்று முடிந்த டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டித் தொடர் குறித்து ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு இன்று (31) இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது. இதில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே ஏஷ்லி டி சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”இலங்கை அணியின் நிரந்தர பயிற்றுவிப்பாளர் பதவிக்கு தற்போது இடைக்காலப் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்ற நிக் போதாஸ் உள்ளிட்ட ஐவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அவர்களுடனான பேச்சுவார்த்தைகளை தொலைபேசி மற்றும் ஸ்கைப் மூலமாக தற்போது மேற்கொண்டு வருகின்றோம். இதன்படி பயிற்சியாளர்களுக்கான பதவிகளுக்காக ஆசிய, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். எனினும், அவர்களில் பெரும்பாலானோர் தற்போது வேறு அணிகளுடன் கடமையாற்றிக் வருவதால் அவர்களது பெயர்களை தற்போது வெளியிட முடியாது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இந்திய தொடரிலும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நிக் போதாஸ் செயற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும், அது தொடர்பில் போதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய தொடரில் பங்கேற்கவுள்ள ஏனைய உதவி பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்திய அணியுடனான போட்டித் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், அதன்பிறகு புதிய பயிற்றுவிப்பாளர் ஒருவர் 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே போட்டியில் இரு உலக சாதனைகளைப் படைத்த கோஹ்லி

கிரிக்கெட் உலகில் அண்மைக்காலமாக…

கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தோல்வியை சந்தித்து முதல் சுற்றுடன் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் பயிற்சியாளராகச் செயற்பட்ட தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த கிரஹம் போர்ட் தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.

அதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்களுக்காக இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராகச் செயற்பட்ட நிக் போதாஸ் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

எனினும், குறித்த தொடர்களில் ஜிம்பாப்வே அணியுடனான ஓரேயொரு டெஸ்ட் போட்டியை இலங்கை அணி வெற்றிகொண்டதுடன், ஒருநாள் தொடரில் படுதோல்வியைத் தழுவியது. அதனைத்தொடர்ந்து இந்திய அணியுடனான அனைத்து வகை போட்டிகளிலும் படு தோல்வியை சந்தித்த இலங்கை அணி, அண்மையில் நிறைவடைந்த பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் வெற்றியையும், ஒரு நாள் மற்றும் T-20 தொடர்களில் தோல்வியையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.