இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை தக்கவைத்துக் கொண்டது இந்தியா

221

இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ஓட்டங்களால் இமாலய வெற்றி ஒன்றை பெற்றுள்ளது. இதன்மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை தக்கவைத்துக் கொண்ட இந்திய அணி தொடரில் 1-2 என பின்தங்கியுள்ளது.

இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சோபிக்க தவறும் இந்திய அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்து….

ட்ரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று (22) இந்திய அணி மூன்று ஓவர்களுக்குள்ளேயே இங்கிலாந்து அணியின் வீழ்த்த வேண்டி இருந்த கடைசி விக்கெட்டை சாய்த்து வெற்றியை உறுதி செய்து கொண்டது. இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் பெறும் ஏழாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

எனினும் இந்த தொடரின் முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்விகளை சந்தித்த இந்திய அணி, இந்த டெஸ்டில் தனது துடுப்பாட்ட பலத்தை நிரூபித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (18) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 329 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் விராட் கோஹ்லி 97 ஓட்டங்களை பெற்று தனது 23 ஆவது சதத்தை தவறவிட்டார். அஜிங்கியா ரஹானேவும் 81 ஓட்டங்களை பெற்று வலுச் சேர்த்தார்.   

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் அண்டர்சன், ஸ்டுவார்ட் புரோட் மற்றும் கிறிஸ் வோகஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து ஹர்திக் பாண்டியாவின் பந்துக்கு முகம்கொடுக்க முடியாமல் 161 ஓட்டங்களுக்கே சுருண்டது. பாண்டியா 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சோபிக்க தவறும் இந்திய அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்து….

முதல் இன்னிங்ஸில் 168 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற இந்திய அணிக்காக கோஹ்லி இரண்டாவது இன்னிங்ஸில் சதம் ஒன்றை பெற்றார். இதன்மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 352 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதனால் போட்டியில் மேலும் இரண்டு நாட்கள் முழுமையாக எஞ்சியிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணிக்கு எட்ட கடினமான 521 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து 62 ஓட்டங்களுக்கே முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது பென் ஸ்டொக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஐந்தாவது விக்கெட்டுக்கு 169 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று நம்பிக்கை தந்தனர்.

இதில் தனது கன்னி டெஸ்ட் சதத்தை பெற்ற பட்லர் பூம்ராஹ்வின் பந்துக்கு ஆட்டமிழக்க ஸ்டொக்ஸும் 62 ஓட்டங்களுடன் வெளியேறினார். இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு விக்கெட் மாத்திரமே பெறப்பட வேண்டிய நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் தொடர்ந்தபோது கட்டணம் அறவிடப்படாமலேயே மைதானத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கண்டியுடனான பரபரப்பான மோதலில் சுப்பர் ஓவரின் பின்னர் வென்ற கொழும்பு

எனினும் கடைசி நாள் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட்டை ரவிச்சந்தர் அஷ்வின் வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 317 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரிட்ட பூம்ராஹ் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதை இரண்டு இன்னிங்ஸிலும் அபாரமாக துடுப்பெடுத்தாடி கோஹ்லி தட்டிச் சென்றார்.

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 329 (94.5) – விராட் கோஹ்லி 97, அஜிங்கியா ரஹானே 81, ஜேம்ஸ் அண்டர்ஸன் 3/64, ஸ்டுவட் பிரோட் 3/72, கிறிஸ் வோகஸ் 3/75

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 161 (38.2)ஜோஸ் பட்லர் 39, அலஸ்டயர் குக் 29, ஹார்திக் பாண்டியா 5/28, இஷான்ட் ஷர்மா 2/32, ஜஸ்பிரிட் பும்ராஹ் 2/37

இந்தியா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 352/7d (110) – விராட் கோஹ்லி 103, சேதேஷ்வர் புஜாரா 72, ஹார்திக் பாண்டியா 52*, ஆதில் ரஷீத் 3/101, பென் ஸ்டொக்ஸ் 2/68

இங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 317 (104.5) – ஜோஸ் பட்லர் 106, பென் ஸ்டொக்ஸ் 62, ஜஸ்பிரிட் பும்ராஹ் 5/85, இஷான்ட் ஷர்மா 2/70

முடிவு: இந்தியா 203 ஓட்டங்களால் வெற்றி           

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<