நுவரெலியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்டம்

99

சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தேசிய ஒலிம்பிக் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒலிம்பிக் தின கொண்டாட்டங்கள் கடந்த 25ஆம் திகதி நுவரெலியாவில் நடைபெற்றது.  

நகர்வு, கற்றல், கண்டுபிடித்தல் ஆகிய மூன்று அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற தேசிய ஒலிம்பிக் தின விழா கொண்டாட்டங்கள் முதற்தடவையாக இம்முறை நுவரெலியாவில் நடைபெற்றது.

தேசிய விளையாட்டு விழா பளுதூக்கலில் வடக்கு மாணவி ஆஷிகா தேசிய சாதனை

இந்நிகழ்வில் இலங்கைக்கான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை 2002ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் வென்று கொடுத்த முன்னாள் நட்சத்திர குறுந்தூர வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கையரான ஜயந்தி குருஉதும்பால மற்றும் ஜொஹான் பீரிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஒலிம்பிக் தின ஓட்ட நிகழ்வில் பங்கேற்றனர்.  

நுவரெலியா, ஜனாதிபதி இல்லத்திலிருந்து ஆரம்பித்து நுவரெலியா சினேசிடா மைதானத்தில் நிறைவுபெற்ற ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஒலிம்பிக் தின ஓட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 1000இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன், கடந்த வருடம் துர்க்மெனிஸ்தானில் நடைபெற்ற ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கயன்திகா அபேரத்ன, 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் வீராங்கனையான புஷ்பமாலி ராமநாயக்க, முன்னாள் வீரர்கள், இளையோர் அமைப்புகள் என பல தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

ஒலிம்பிக் தின கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக ஒலிம்பிக்கின் முக்கியத்துவம், அதன் விழுமியங்கள் தொடர்பான கல்விச் செயற்பாடுகள், புதிய விளையாட்டுக்கள் குறித்து விளக்கம் அளிக்கும் நோக்கில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்களுக்கான விசேட கருத்தரங்கு 24ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதனையடுத்துவிளையாட்டு” என்ற தொனிப்பொருளில் சித்திரம் வரைதல் போட்டி நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியில் இடம்பெற்றது.

உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியன் பேர் கிரிக்கெட்டுக்கு ஆதரவு

இறுதியாக, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கலந்துகொண்டார்.

இதன்போது, ஒலிம்பிக் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நுவரெலியா மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சித்திரம் வரைதல் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், ஒலிம்பிக் தின ஓட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கும் பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதேநேரம் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு நட்சத்திர மெய்வல்லுனர் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க கருத்து வெளியிடுகையில்,

”ஒரு மெய்வல்லுனர் வீராங்கனையாக நான் முதற்தடவையாக நுவரெலியாவுக்கு வந்துதான் பயிற்சிகளை ஆரம்பித்தேன். இந்த நகரம் சுத்தமான காற்றுடன் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு மெய்வல்லுனர் வீரர்களுக்கும் முக்கிய இடமாக இது அமைந்துள்ளது. விளையாட்டு வீரராக நீங்கள் உங்கள் உடலின் ஏரோபிக் திறனை அதிகரிக்க வேண்டும். அதை நான் இங்கு வந்துதான் ஆரம்பித்தேன். எனவே, அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என தெரிவித்தார்.

அங்கு வந்திருந்த மாணவர்கள் முன்னிலையில் தொடர்ந்து பேசிய அவர், உங்களிடம் ஒரு உறுதியான குறிக்கோள் இருந்தால் நீங்கள் அதில் உறுதியாக இருங்கள். அதற்காகவே உங்களது காலத்தையும், நேரத்தையும் அர்ப்பணிப்புச் செய்ய வேண்டும். இதை மனதில் வைத்துக்கெண்டுதான் நான் ஆசியாவையும், பின்னர் உலகையும் வெற்றி கொண்டேன். நான் ஒருபோதும் எனது கனவை கைவிடல்லை.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் தங்கம் வென்ற பாரமிக்கு ஜனாதிபதியால் நிதியுதவி

எனவே, முறையான பயிற்சியும் வழிகாட்டலும் இருந்தால் திறமையான வீரர்களை வளர்த்தெடுக்க முடியும், அந்த வீரர்கள் தான் எதிர்காலத்தில் நாட்டிற்கு பெருமையையும், கௌரவத்தையும் தேடிக் கொடுப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், ஒலிம்பிக் பதக்கத்தை வென்றதன் பிறகு சுமார் 17 வருடங்களுக்குப் பிறகுதான் தேசிய ஒலிம்பிக் சங்கத்தினால் எனக்கு உரிய அங்கீகரிப்பு கிடைத்துள்ளது. இதற்காக தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருக்கும், செயலாளருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நுவரெலியாவை விளையாட்டு வீரர்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு தளமாக பயன்படுத்த வேண்டும் என்ற சுசந்திகாவின் யோசனையை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுப்ரமணியம் ஆதரித்தார். அதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா நகரம் இயற்கையானதும், சிறப்பான ஒரு மையமாக மாறியுள்ளது. எனவே இந்த நகரத்தில் உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்கு நாம் ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

இதேவேளை, இந்த விசேட நிகழ்வில் ஸ்போர்ட்ஸ் விளையாட்டும் முதற்தடவையாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க