பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை கால்பந்து குழாம்

489
National Football Training Pool

இலங்கை கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமிர் அலாஜிக் தெரிவு செய்த 22 பேர் அடங்கிய இலங்கை கால்பந்து குழாம், அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளது. 

அந்தவகையில், இந்தப் பயிற்சிகள் 2021ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 03ஆம் திகதி பெத்தாகானயில் அமைந்திருக்கும் தேசிய பயிற்சி நிலையத்தில் (National Training Complex) ஆரம்பிக்கவிருக்கின்றன. 

>> Video – 46 வருடகால சாதனையை சமன் செய்த மெஸ்ஸி | FOOTBALL ULAGAM

அதேநேரம், முதல் கட்டமாக நடைபெறும் இந்தப் பயிற்சிகள் (இரண்டு வாரங்கள், அதாவது ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை) நடைபெறும் என இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

மறுமுனையில் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக இந்தப் பயிற்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கால்பந்து வீரர்கள் உயிரியல் பாதுகாப்பு வலயத்திற்குள் (Bio-Bubble Environment) உள்வாங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அதேநேரம், பயிற்சிக்காலத்தின் போது வீரர்கள் எவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டர்கள் எனவும், வெளியில் இருந்து எவரும் உயிரியல் பாதுகாப்பு வலயத்திற்குள் செல்ல முடியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

திலிப் பீரிஸ், மொஹமட் பசால், மொஹமட் ஆகிப், டக்சன் பியூஸ்லஸ், 

கொவிட்-19 வைரஸ் காரணமாக இலங்கை கால்பந்து அணி உலகக் கிண்ண மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ண தகுதிகாண் தொடரில் விளையாடவிருந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. எனவே, பயிற்சிகளை மீள ஆரம்பிக்கும் இலங்கை கால்பந்து அணி இந்த தகுதிகாண் தொடரினை கருத்திற் கொண்டு செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

பயிற்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் விபரம்

சுஜான் பெரேரா, ப்ரபாத் ருவன் அனுரசிறி, ஆர்.பி. தனுஷ்க, எம்.ஏ. நுவான் கிம்ஹான, எம். ஷலன சமீர, அப்துல் பாஸித், மதுஷான் பெர்னாந்து, ஜூட் சுபன், ஷரித்த ரத்னாயக்க, சமோத் டில்ஷான், அஹமட் சஷ்னி, அஷிகுர் ரஹ்மான், மொஹமட் சபீர் ரசூனியா, றஹ்மான், யூ.எஸ்.டி. தனுஷ்க, சர்வான் ஜோஹர், கவிந்து இஷான், சுபுன் தனன்ஜய விஜயசிங்க, சுந்தராஜ் நிரேஷ், றிப்கான் மொஹமட், அஹமட் வஸிம் ராஸிக், ஹர்ஷ பெர்னாந்து  

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<