தேசிய வயதுநிலை நீச்சல் போட்டிகள் ஆகஸ்ட் 9இல் ஆரம்பம்

88

இலங்கை நீர்நிலை விளையாட்டுத்துறை சங்கம் 44ஆவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள தேசிய வயதுநிலை நீச்சல் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ நீச்சல் தடாகத்தில் நடைபெறவுள்ளது.

றோயல் – தோமியர் நீச்சல் தொடரின் சம்பியன் பட்டம் றோயலுக்கு

இலங்கையின் நீர்நிலை போட்டிகளில் அதிகளவான வீரர்களை உருவாக்கிய பெருமையைக்…

இம்முறை போட்டித் தொடர் 11 வயது முதல் 20 வயது வரையான ஐந்து வயதுப் பிரிவுகளில் நடைபெறவுள்ளன. இதில் 20 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கான போட்டிகள் 1998ஆம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்களுக்காக மாத்திரம் நடைபெறவுள்ளது.  

தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்முறை போட்டிகளில் பாடசாலை மற்றும் நீச்சல் கழகங்களைச் சேர்ந்த சுமார் 300இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். அத்துடன், 176 ஆரம்ப சுற்றுப் போட்டிகளுடன், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய வயதுநிலை நீச்சல் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மருதானை புனித ஜோசப் கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் கொழும்பு விசாகா கல்லூரி அணியும் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தன.

இதேநேரம், 15ஆவது தடவையாகவும் அகில இலங்கை பாடசாலை நீர்நிலைப் போட்டிகளில் சம்பியன் பட்டத்தை வென்ற மருதானை ஜோசப் கல்லூரி, இம்முறையும் தமது ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இளையோர் ஒலிம்பிக் விழாவுக்கு தகுதிபெற்ற இலங்கை வீரர்கள் விபரம்

ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு…

அதேபோல், பெண்கள் பிரிவில் கடந்த வருடம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட வத்தளை லைசியம் சர்வதேசப் பாடசாலை அணி, விசாகா கல்லூரி அணிக்கு பலத்த போட்டியைக் கொடுக்கும் என நம்பப்படுகின்றது.

இதேவேளை, தேசிய மட்டத்தில் அண்மைக்காலமாக ஜொலித்து வருகின்ற அகலங்க பீரிஸ், கங்கா செனவிரத்ன, ரமுதி சமரகோன், நிஷாதி பெரேரா, வினோலி களுஆரச்சி உள்ளிட்ட பாடசாலை நட்சத்திரங்கள் இம்முறை போட்டிகளில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், 44ஆவது தேசிய வயதுநிலை நீச்சல் போட்டிகளின் முடிவுகள், போட்டி அறிக்கை, கட்டுரைகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை ThePapare.com இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்.

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க