இங்கிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்துள்ள பாகிஸ்தான்!

99

இங்கிலாந்து கிரிக்கெட் அணியை எதிர்வரும் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளது. எனினும், தொடருக்கு இங்கிலாந்து அணி செல்வது இதுவரையில் உறுதிசெய்யப்படவில்லை.

இதுதொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச கிரிக்கெட்டை பாகிஸ்தானுக்கு மீண்டும் அழைத்துவரும் நோக்கில், எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே,  எம்மால் எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தேர்வாளர் பதவியிலிருந்து விலகும் மிஸ்பா

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2005ம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை. இவர்களது அடுத்த தொடர் ஐசிசியின் அட்டவணையின் படி 2022ம் ஆண்டு உள்ளது. அடுத்த வருடத்துக்கான இங்கிலாந்து அணியின் தொடருக்காக கொவிட்-19 உயிரியல் பாதுகாப்பு விதிமுறைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வரிசைப்படுத்தியுள்ளது. அதேநேரம், இங்கிலாந்து அணிக்கு தொடர்ச்சியாக போட்டிகள் உள்ளன. எவ்வாறாயினும், பாகிஸ்தான் தொடர் குறித்த தீர்மானத்தை இங்கிலாந்து கிரிக்கெட் சபை மேற்கொள்ளவில்லை.

“தற்போது எந்தவொரு தொடர் ஆரம்பிக்கப்பட்டாலும், வீரர்களது பாதுகாப்பு மற்றும் நலன் என்பவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்று கொவிட்-19 உயிரியல் பாதுகாப்பு வலைய விதிமுறைகள் உட்பட, பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதுமாத்திரமின்றி, எமக்கு இப்போதுள்ள தொடர் அட்டவணைகளையும் கருத்திற்கொண்டு, இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் ஏனைய அனைத்து கிரிக்கெட் சபைகளுடன் தொடர்கள் குறித்து ஆராயும் போது, மேற்குறித்த அம்சங்கள் தொடர்பில் ஆராயப்படும்.  அதன் பின்னர், இறுதி தீர்மானம் எடுக்கப்படும்” என இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Video – 49 வருட வரலாற்றில் 4 தடவைகள் மாத்திரமே படைக்கப்பட்ட சாதனை!

இங்கிலாந்து அணி எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தியா சென்று டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரையடுத்து இங்கிலாந்து அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<