வணிக கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராகும் நலின் விக்ரமசிங்க

Mercantile Cricket Association

77
 

வணிக ​​கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக மோட் நிறுவன குழுமத்தின் (Mode Group of Companies) பொது முகாமையாளர் நலின் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வனிக கிரிக்கெட் சங்கத்தின் 104வது வருடாந்த சந்திப்பு நேற்று (29) நடைபெற்ற போது, 42வது தலைவராக ஓய்வுபெற்ற வங்கியாளரான நலின் விக்ரமசிங்க,  ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

IPL இல் இருந்து விலகினார் அர்ஜுன் டெண்டுல்கர்

நலின் விக்ரமசிங்க வணிக ​​கிரிக்கெட் சங்கத்தின் 28வது இலங்கையராக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், 2021-2022ம் ஆண்டு காலப்பகுதியில் தலைவராக கடமையாற்றவுள்ளார். இதற்கு முதல் டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் ரொஹான திசாநாயக்க தலைவராக செயற்பட்டிருந்தார்.

இதேவேளை, உப தலைவர்களாக பெயார்பெர்ஸ்ட் காப்புறுதி நிறுவனத்தின் மஹேஷ் டி அல்விஸ், சிங்கர் நிறுவனத்தின் துஷான் அமரசூரிய, டிரெண்டக்ஸ் நிறுவனத்தின் சிரோஷா குணதிலக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது செயலாளராக ஸ்டபோர்ட் மோட்டார் நிறுவனத்தின் தரிந்திர களுபெரும நியமிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாளராக டி.எப்.சி.சி. வங்கியின் அச்சிந்த ஹேவநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…