இலங்கை வரும் பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

33
skysports-bangladesh-vs-new-zealand

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கும் 16 பேர் அடங்கிய பங்களாதேஷ் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

>>நியூசி. அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் கேரி ஸ்டெட்<<

பங்களாதேஷ் – இலங்கை ஆகிய இரண்டு கிரிக்கெட் அணிகளும் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புதிய பருவத்திற்காக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றன.

அதன்படி இந்த தொடருக்கான பங்களாதேஷ் டெஸ்ட் குழாமே நஜ்முல் ஹொசைன் ஷன்டோ தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் அடுத்த ஓராண்டுக்கு ஷன்டோவின் டெஸ்ட் தலைவர் பதவிக் காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது.

அறிவிக்கப்பட்டிருக்கும் பங்களாதேஷ் டெஸ்ட் குழாத்தில் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான லிடன் தாஸ் உபாதையின் பின்னர் இணைக்கப்பட்டுள்ளதோடு, சுமார் இரண்டு வருட இடைவெளியின் பின்னர் வேகப்பந்துவீச்சாளர் இபாடொட் ஹொசைனிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் இடதுகை சுழல் வீரர் ஹசன் முராட் மற்றும் வலதுகை வேகப்பந்துவீச்சாளர் நாஹிட் ரனா ஆகியோருக்கும் சிறு இடைவெளியொன்றின் பின்னர் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

அதேவேளை பங்களாதேஷின் இறுதி டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த தன்வீர் இஸ்லாம், தன்சிம் ஹசன் சகீப் மற்றும் மஹ்முதுல் ஹசன் ஜோய் ஆகியோருக்கு இலங்கை டெஸ்ட் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருகின்றது.

பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் மாதம் 17ஆம் திகதி காலியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் மாதம் 25ஆம் திகதி கொழும்பிலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் குழாம்

 

நஜ்முல் ஹொசைன் ஷன்டோ (தலைவர்), சாட்மன் இஸ்லாம், அனாமுல் ஹக், மொமினுல் ஹக், முஸ்பிகுர் ரஹீம், லிடன் குமார் தாஸ், மஹிதுல் இஸ்லாம் பூயான், ஜாகேர் அலி, மெஹிதி ஹஸன் மிராஸ், தய்ஜூல் இஸ்லாம், நயீம் ஹஸன், ஹசன் முராட், இபாதோட் ஹஸன், ஹஸன் மஹ்மூத், நாஹிட் ரனா, சையத் காலேத் அஹ்மட்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<