ஆசிய குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்றார் நதீக்கா

Asian Boxing Championship - 2021

201

டுபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இலங்கை வீராங்கனை நதீக்கா புஷ்பகுமாரி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

இதன்மூலம் 9 வருடங்களுக்குப் பிறகு ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றுக்கொண்டார். முன்னதாக 2012இல் ஷிரோமி வீரரட்ன வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத்துறையை மேம்படுத்த மூன்று சங்கங்களுக்கு நிதி உதவி

ஆசிய குத்துச்சண்டை சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 31ஆவது ஆசிய குத்துச்சண்டை போட்டி டில்லியில் மே 21 முதல் 31 வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை போட்டி டுபாய்க்கு மாற்றப்பட்டது. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான இறுதி வாய்ப்பாக நடைபெறுகின்ற இந்தப் போட்டியில் 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 187 வீர வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.  

அத்துடன், இம்முறை ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சார்பாக 4 வீரர்கள், 3 வீராங்கனைகள் என ஏழு பேர் பங்கேற்றிருந்தனர்.

இதில் ஆண்களுக்கான 52 கிலோ கிராம் எடைப் பிரிவில் கே.வி.எல். எரந்த, 56 கிலோ கிராம் எடைப்பிரிவில் ருக்மால் பிரசன்ன, பெண்களுக்கான 48 கிலோ கிராம் எடைப் பிரிவில் ரஸ்மிக்கா இலங்கரத்ன ஆகியோர் தத்தமது காலிறுதிப் போட்டிகளில் கடுமையாக போட்டியிட்டு இறுதியில் தோல்வியை எதிர்கொண்டனர்

ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்த இலங்கையின் மில்கா கிஹானி

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் நடைபெற்ற பெண்களுக்கான 51 கிலோ கிராம் குறைபார எடைப் பிரிவில் பங்குபற்றிய நதீக்கா புஷ்பகுமாரி, இரண்டு தடவைகள் உலக சம்பயினான கஸகஸ்தான் வீராங்கனை நஸிம் கிஸாய்பேயை அரை இறுதிப் போட்டி ஒன்றில் எதிர்கொண்டார்

அனுபவசாலியான கிஸாய்பேயின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுப்பதில் சிரமத்தை எதிர்கொண்ட அவர் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்று திருப்தி அடைந்தார்.

ஹொரணை தக்ஷிலா கல்லூரியின் பழைய மாணவியான நதீக்கா, இறுதியாக 2019இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது

சுவீடனில் வளர்ந்து இலங்கை சார்பாக ஒலிம்பிக் செல்லும் மெட்டில்டா கார்ல்சன்

இந்த நிலையில், 51 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஸகஸ்தான் வீராங்கனை நஸீமை இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் எதிர்கொண்டார்.

அனுபவம் வாய்ந்த மேரி கோம் தன்னைவிட 11 வயது குறைவான வீராங்கனையை எதிர்கொண்டபோதிலும், நஸீமே ஆதிக்கம் செலுத்தினார்.

மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்றில் மேரி கோம் கடுமையாக முயற்சித்தும் நஸீமை அவரால் வீழ்த்த முடியவில்லை. இறுதியில் 2-3 என்ற கணக்கில் மேரி கோம் தோல்வியடைந்தார். இதன்மூலம், 6 முறை உலக சம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் ஆசிய குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க …