முஸ்தபிசுர் ரஹ்மான் முன்னேற வழி கூறுகிறார் ஹதுருசிங்ஹ

1085
Mustafizur will develop quickly if he plays in England

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக இலங்கையைச் சேர்ந்த சந்திக்க ஹதுருசிங்ஹ கடமையாற்றி வருகிறார். இவர் இங்கிலாந்தில் நடைபெறும் நெட்வஸ்ட் டி20 ப்ளாஸ்டில் சசெக்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முஸ்தபிசுர் ரஹ்மான் அங்கு சென்று விளையாடினால் விரைவில் முன்னேற்றம் அடைவார் என்று கூறியுள்ளார்.

பங்களாதேஷ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் முன்னணியில் இருப்பவர் முஸ்தபிசுர் ரஹ்மான் . இவர் தனது இடதுகை வேகப்பந்து வீச்சால் முன்னணித் துடுப்பாட்ட வீரர்களை திணறடித்து வருகிறார்.

இங்கிலாந்து மகளிர் அணியின் தலைவியாக ஹீதர் நைட்

கடந்த வருடம் இந்தியாவிற்கு எதிரான தொடரில் அறிமுகமான இவர், அந்தத் தொடரில் இந்தியாவை முதன்முறையாக பங்களாதேஷ் அணி  வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். இவரது அபாரப் பந்து வீச்சால் தற்போது நடைபெற்று முடிந்த .பி.எல். தொடரில் ஹைஐதராபாத் அணி அவரை சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது.

இவர் சந்தித்த முதல் தொடரிலேயே ஹைதராபாத் அணிக்கு கிண்ணத்தைவாங்கிக் கொடுத்துள்ளார். இந்தத் தொடரில் ஹைதராபாத் அணி மொத்தம் 17 போட்டிகளில் விளையாடியது. இதில் ஒரேயொரு போட்டியில் மட்டும் முஸ்தபிசுர் ரஹ்மான் விளையாடவில்லை. மீதமுள்ள 16 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். அந்த அணியின் தலைவர் டேவிட் வோர்னர் இவரை இறுதி ஓவர்களில் சிறப்பான வகையில் பயன்படுத்தினார்.

17 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ள இவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 6.90 ஓட்டங்களை  மட்டுமே கொடுத்தார். .பி.எல். தொடரில் அபாரமாக விளையாடிதன் காரணமாக இங்கிலாந்து கவுண்டி கழக அணியான சசெக்ஸ் இவரை ஒப்பந்தம் செய்தது. இதனால் பங்களாதேஷ் கிரிக்கட்டிற்கே  இவர் புகழைத் தேடித்தந்துள்ளார்.

இந்த நிலையில், இங்கிலாந்து மண்ணில் முஸ்தபிசுர் ரஹ்மான்  விளையாடினால் அவர் விரைவாக முன்னேற்றம் காண்பார் என்று பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் பயிற்சியாளரான, இலங்கையைச் சேர்ந்த சந்திகா ஹதுருசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இந்திய மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான தொடர் ஜூலை 6ஆம் திகதி ஆரம்பம்

இது குறித்து ஹதுருசிங்ஹ கூறுகையில் ‘‘உங்களுடைய கிரிக்கட் செயல்திறனில் முன்னேற்றம் காண விரும்பினால், இங்கிலாந்து போன்ற சூழ்நிலையில் விளையாட வேண்டும். நீங்கள் அங்கே செல்லவில்லை எனில், உங்களால் எதுவும் தெரிந்து கொள்ளமுடியாது.

முஸ்தபிசுர் ரஹ்மான்  விரைவில் முன்னேற்றம் அடைந்து சிறப்பாக செயல்பட்டால், பங்களாதேஷ் அணி கட்டாயம் நல்ல பயனை அடையும். தற்போது ஏற்பட்ட சிறிய காயம் அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டால், அவர் இங்கிலாந்து சென்று விளையாடுவது நல்ல விஷயமாக இருக்கும். இங்கிலாந்து கவுண்டி அணியில் பங்களாதேஷ்  வீரர்கள் இடம்பிடிப்பது மிகவும் அரிதான விஷயம்என்று கூறியுள்ளார்..

வெறுமனே 20 வயதான முஸ்தபிசுர் ரஹ்மான் பங்களாதேஷ் அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 விக்கட்டுகளையும், 9 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 26 விக்கட்டுகளையும், 13 டி20 போட்டிகளில் விளையாடி 22 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பலமான இந்தியாவுக்கு எதிராக தான் அறிமுகமான முதலாவது  ஒருநாள் போட்டியிலேயே 5 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் அந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டு இருந்தார். இளம் வயதில் துல்லியமாகப் பந்து வீசும் திறமை கொண்ட இவருக்கு நிச்சயமாக சிறந்த எதிர்காலமுண்டு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.  

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்