லிஹினி அப்ஷராவின் அற்புதமான சதத்துடன் விமானப்படை A அணிக்கு வெற்றி

99
Women’s Inter-Club Division I 50-over Cricket

இலங்கை கிரிக்கெட்  சபையின் ஏற்பாட்டில் இன்று (07) நடைபெற்ற மகளிருக்கான டிவிஷன் 1 உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் போட்டித்தொடரில் லிஹினி அப்ஷராவின் அற்புதமான சதத்துடன், விமானப்படை A அணி இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

அதேநேரம், இராணுவ விளையாட்டு கழகம் (B), கடற்படை விளையாட்டு கழகம் மற்றும் இராணுவ விளையாட்டு கழகம் (A) ஆகிய அணிகள் இன்றைய தினம் தங்களுடைய வெற்றிகளை பதிவுசெய்தன.

>> காலிறு வாய்ப்பை இழந்தது கொக்குவில் இந்துக் கல்லூரி

விமானப்படை விளையாட்டு கழகம் (B) எதிர் இராணுவ விளையாட்டு கழகம் (B)

ஹோமாகம பிட்டிபன இராணுவ மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், மாதரா சமரகோனின் அற்புதமான ஐந்து விக்கெட் குவிப்புடன் இராணுவ விளையாட்டு கழகம் இலகுவான வெற்றியை பதிவுசெய்துக்கொண்டது.

அபாரமான பந்துவீச்சின் உதவியுடன் வெறும் 51 ஓட்டங்களுக்கு விமானப்படை மகளிர் அணி வீழ்த்தப்பட, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இராணுவப்படை அணி 13.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

விமானப்படை அணியின் உஷானி ருவன்திகா அதிகபட்சமாக 10 ஓட்டங்களை பெற, ஏனைய வீராங்கனைகள் அனைவரும் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் வெளியேறினர். பந்துவீச்சில் மாதரா சமரகோன் 10 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், நிசாந்தி பத்மசந்திர 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இராணுவ அணி சார்பாக இரேஷா தமயந்தி ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

சுருக்கம்

விமானப்படை விளையாட்டு கழகம் (B) – 51/10 (32.1), உஷானி ருவன்திகா 10, மாதரா சமரகோன் 10/5, நிசாந்தி பத்மசந்திர 11/2

இராணுவ விளையாட்டு கழகம் (B) 51/1 (12.3), இரேஷா தமயந்தி 22*, சிதுமினி பீரிஸ் 18, சகுனி விஜேசிங்க 10/1

முடிவு – இராணுவ விளையாட்டு கழகம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டு கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கடற்படை மகளிர் அணி மிகவும் இலகுவான வெற்றியை இன்றைய தினம் பதிவுசெய்தது.

கடற்படை அணியின் பந்துவீச்சு வீராங்கனைகள் அனைவரும் அபாரமாக பந்துவீச, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்த கோல்ட்ஸ் அணி 36.4 ஓவர்கள் துடுப்பெடுத்தாடியும் வெறும் 44 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

உதேசிகா பிரபோதனி, தாரிகா செவ்வந்தி, இனோகா ரணவீர மற்றும் ஹன்சிமா கருணாரத்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, கோல்ட்ஸ் அணி முற்றுமுழுதாக தங்களுடைய துடுப்பாட்டத்தில் வீழ்ச்சிக்கண்டது. இதில், ஒரு வீராங்கனையும் துடுப்பாட்டத்தில் இரட்டை இலக்க ஓட்டங்களை அடையவில்லை.

பதிலுக்கு இலகுவான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய கடற்படை அணி எந்தவித விக்கெட்டிழப்பும் இன்றி 9.4 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. ஹாசினி பெரேரா 29 ஓட்டங்களையும், சத்யா சந்தீபனி 15 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 44/10 (36.4), கவீஷா ரணவீர 7, உதார சேதனி பண்டார 7, ஹன்சிமா கருணாரத்ன 2/2, இனோகா ரணவீர 8/2, உதேசிகா பிரபோதனி 10/2, தாரிகா செவ்வந்தி 13/2

கடற்படை விளையாட்டு கழகம் – 45/0 (9.4), ஹாசினி பெரேரா 29*, சத்யா சந்தீபனி 15*

முடிவு – கடற்படை மகளிர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இராணுவ விளையாட்டு கழகம் (A) எதிர் சீனிகம கிரிக்கெட் கழகம்

ஹிக்கடுவை எம்.சி.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இராணுவ விளையாட்டு கழகம் நிர்ணயித்திருந்த 140 என்ற வெற்றியிலக்கை நெருங்கியிருந்த போதும், துரதிஷ்டவசமாக 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சீனிகம கிரிக்கெட் கழக மகளிர் அணி தோல்வியை சந்தித்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இராணுவ அணி முதலில் துடுப்பெடுத்தாடியதுடன், 42.4 ஓவர்களில் 139 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக அனுஷ்கா சஞ்சீவனி 22 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, சீனிக அணியை பொருத்தவரை, சச்சினி நிசன்சலா, விஹாரா செவ்வந்தி மற்றும் சுலேஷா சத்சாரங்கி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சீனிகம அணி சார்பில் நவோத்யா நெத்மினி அதிகமாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், மத்திய வரிசை வீராங்கனைகள் ஓரளவு ஓட்டங்களை குவித்தனர். எனினும், சுகந்திகா குமாரி மற்றும் இமால்கா மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சவாலை கொடுத்தனர். இறுதியாக வெற்றியிலக்கை நெருங்கிய சீனிகம அணி 43.3 ஓவர்கள் நிறைவில் 123 ஓட்டங்களை பெற்று, சகல விக்கெட்டுகளையும் இழந்து 16 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

சுருக்கம்

இராணுவ விளையாட்டு கழகம் (A)  139/10 (42.4), அனுஷ்கா சஞ்சீவனி 22, சச்சினி நிசன்சலா 21/2, விஹாரா செவ்வந்தி 13/2, சுலேஷா சத்சாரங்கி 20/2

சீனிகம கிரிக்கெட் கழகம் – 123/10 (43.3), நவோத்யா நெத்மினி 28, சுகந்திகா குமாரி 30/2, இமால்கா மெண்டிஸ் 13/2

முடிவு – இராணுவ விளையாட்டு கழகம் 16 ஓட்டங்களால் வெற்றி

விமானப்படை விளையாட்டு கழகம் (A) எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

விமானப்படை விளையாட்டு கழகத்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை லிஹினி அப்ஷராவின் அபார சதத்தின் உதவியுடன் அந்த அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய விமானப்படை அணி லிஹினி அப்ஷராவின் 127 ஓட்டங்கள் மற்றும் டிலானி மனோதரவின் 46 ஓட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 288 ஓட்டங்களை குவித்தது.

மிகப்பெரிய இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிலாபம் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனைகள் ஏமாற்றினர். இறுதிாக மல்ஷா மதுஷானி 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தும் அந்த அணியால் 46.3 ஓவர்களில் 145 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பந்துவீச்சில், அமா காஞ்சனா, இனோஷி பெர்னாண்டோ மற்றும் ஓசதி ரணசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சுருக்கம்

விமானப்படை விளையாட்டு கழகம் (A) – 288/4 (50), லிஹினி அப்ஷரா 127, டிலானி மனோதரா 46, சதுனி நிசன்சலா 46/1

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 145/10 (46.3),  மல்ஷா மதுஷானி 51, இனோஷி பெர்னாண்டோ 33/2, ஓசதி ரணசிங்க 23/2, அமா காஞ்சனா 36/2

முடிவு – விமானப்படை அணி 143 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<