பங்களாதேஷ் அணியிலிருந்து விலகும் முஷ்பிகூர் ரஹீம்

Bangladesh tour of West Indies 2022

106
 

பங்களாதேஷ் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் முஷ்பிகூர் ரஹீம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

முஷ்பிகூர் ரஹீம் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கிந்திய தீவுகளுக்கு எதி்ரான தொடரில் விளையாட முடியாது என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் முஷ்பிகூர் ரஹீம் அறியத்தந்துள்ளார் என கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் கலீட் மஹ்மூட் தெரிவித்துள்ளார்.

>>இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய A அணி

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் கலீட் மஹ்மூட் இதுதொடர்பில் குறிப்பிடுகையில், “முஷ்பிகூர் ரஹீம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாட முடியாது என எம்மிடம் தெரிவித்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து முஷ்பிகூர் ரஹீம் விலகியுள்ளமை பங்களாதேஷ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷ் அணியை பொருத்தவரை முஷ்பிகூர் ரஹீமுடன் நான்கு முக்கிய வீரர்கள் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்களான டஸ்கின் அஹமட் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளாகிய சொரிபுல் இஸ்லாம், சுழல் பந்துவீச்சாளர் நயீம் ஹஸன் ஆகியோர் இவ்வாறு வெளியேறியுள்ளனர்.

மேற்கிந்திய திவுகள் தொடருக்கான பங்களாதேஷ் அணி எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி மேற்கிந்திய தீவுகள் புறப்படவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் செல்லவுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<