சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டோனி

15

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான மகேந்திரசிங் டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக தன்னுடைய உத்தியோகபூர்வ இன்ஸ்ராகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஓய்வுபெறுவது தொடர்பில் இன்ஸ்ராகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவுசெய்துள்ள இவர், “என் மீதான அன்பும் ஆதரவும் வைத்திருந்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள். 1929 மணித்தியாலயத்தை கருத்திற்கொண்டு ஓய்வுபெறுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired

A post shared by M S Dhoni (@mahi7781) on

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான தலைவர்களில் ஒருவரான மகேந்திரசிங் டோனி, ஐசிசியின் மிகப்பெரிய மூன்று கிண்ணங்களை இந்திய அணிக்கு தனது தலைமைத்துவத்தின் கீழ் வென்றுக்கொடுத்துள்ளார்.

>>பங்களாதேஷ் உயர் செயற்திறன் குழாத்தின் பயிற்றுவிப்பாளராக ரெட்போர்ட் நியமனம்<<

இவர் 2007ம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணம், 2011ம் ஆண்டு உலகக் கிண்ணம் மற்றும் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சம்பியன்ஷ் கிண்ணம் என்பவற்றுக்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கியதுடன், அணி சம்பியன் கிண்ணத்தையும் வென்றிருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக ஜொலித்த மகேந்திரசிங் டோனி, இறுதியாக 2019ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார். இந்தப் போட்டியில் இவரின் ரன்-அவுட் ஆட்டமிழப்பானது இந்திய அணிக்கு தோல்வியை வழங்கியிருந்ததாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன.

அதன் பின்னர், டோனி இந்திய அணிக்காக எந்தவொரு போட்டிகளிலும் விளையாடியிருக்கவில்லை. இந்திய இராணுவப்படையுடன் தனது ஓய்வு நேரங்களை கழித்திருந்த இவர், இம்முறை அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த T20 உலகக் கிண்ணத்துடன், சர்வதேச போட்டிகளிலிருந்து விடைபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த T20 உலகக் கிண்ணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தன்னுடைய ஓய்வை திடீரென மகேந்திரசிங் டோனி அறிவித்துள்ளார்.

மகேந்திரசிங் டோனி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து கடந்த 2014ம் ஆண்டு தனது ஓய்வினை அறிவித்திருந்ததுடன், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வந்தார்.

>>Video – IPL தொடரின் மறுவடிவமா? LPL | Cricket Galatta Epi 32<<

டோனி இதுவரையில் இந்திய அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 T20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், முறையே, 4876, 10773 மற்றும் 1617 ஓட்டங்களை குவித்துள்ளார். அதேநேரம், பிரபல விக்கெட் காப்பாளராக பார்க்கப்பட்ட இவர், களத்தடுப்பில் சர்வதேச போட்டிகளை பொருத்தவரை 829 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, தனது ஓய்வு அறிவிப்பில் வித்தியாசத்தை காண்பித்துள்ள மகேந்திரசிங் டோனி, தான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மணிநேரங்களை கணித்து, 1929 மணித்தியாலத்துடன் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளமை சுவாரஷ்மான விடயமாக பார்க்கப்படுகிறது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<