இந்திய அணிக்கு திரில் வெற்றி

202
Kedar Jadhav
@AFP

ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, டி20 கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே வீரர்களின் ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.

இதனால், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருந்தன. எனவே, இன்றைய 3வது போட்டியில் வெற்றிபெறும் அணியே கோப்பையைத் தட்டிச் செல்லும் என்பதால், இரண்டு அணிகளும் கடுமையாகப் போராடின.

பட்லர், வோக்ஸ் போராட்டம்: போட்டி சமநிலையில் முடிவு

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வீரர் மன்தீப் சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான லோகேஷ் ராகுல் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மனீஷ் பாண்டே டக் அவுட் ஆக, மிகவும் மெதுவான ஆடுகளத்தில் அம்பதி ராயுடு மற்றும் கேதர் ஜாதவ் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ராயுடு 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதிரடியாக ஆடி ரன் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டோனி 13 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

ஜாதவ் மட்டும் சிறப்பாக ஆடி 42 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் அக்சார் படேல் (11 பந்துகளில் 20 ரன்கள்) அதிரடி காட்ட, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்பே தரப்பில் டொனால்ட் திரிபனோ 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. முதல் 6 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஜிம்பாப்வே ஒரு விக்கெட்டை இழந்து 38 ரன்கள் குவித்தது. மூன்றாவது வீரராக களமிறங்கிய சிபந்தா அதிரடியாக ஆடி 28 ரன்கள் எடுத்தார்.

சிம்பாப்வேயிற்கு 2 ஓட்டங்களால் வெற்றி

பீட்டர் மூரும் தன் பங்குக்கு 26 ரன்கள் எடுத்தார். இதனால் ஜிம்பாப்வே சீராக இலக்கை நோக்கி முன்னேறியது. ஆனால் அந்த அணி குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்ததால் வேகமாக ரன் குவிக்க முடியவில்லை.

கடைசி ஓவரில் ஜிம்பாப்வே அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பரிந்தர் சரண் வீசினார். இந்த ஆடுகளத்தில் ஒரு ஓவரில் 21 ரன்கள் குவிப்பது கடினம் என்ற நிலையில், அந்த ஓவரை மருமா எதிர்கொண்டார். முதல் பந்தை சிக்ஸ் அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தார் மருமா. இதற்கு அடுத்த பந்தை வைடாக வீசினார் சரண். அடுத்த பந்தை நோ பாலாக வீச அந்த பந்து பவுண்டரிக்கு சென்றது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. அடுத்த இரண்டு பந்துகளை கச்சிதமாக வீசிய சரண் பவுண்டரியோ, சிக்சோ கொடுக்கவில்லை.

கடைசி இரண்டு பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் 5-வது பந்து பவுண்டரிக்கு சென்றது. கடைசிப் பந்தில் 4 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில், அந்த பந்தை சிகும்புரா தூக்கி அடித்து சாஹலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

58 ரன்கள் குவித்த இந்திய வீரர் ஜாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பரிந்தர் சரண் தொடர் நாயகனாக தேர்வு பெற்றார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்