கேள்விக்குறியான மொஹமட் ஆமீரின் உலகக் கிண்ண வாய்ப்பு

203
Mohammad Amir

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமீர், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என பாகிஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.  

பகிஸ்தானின் போராட்டம் வீணாக இங்கிலாந்துக்கு த்ரில் வெற்றி

பாகிஸ்தானுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி கடைசி ஓவர் வரை போராடி 12 ஓட்டங்களால்

மொஹமட் ஆமீருக்கு அம்மை நோய் (Chickenpox) ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர், குறித்த இரண்டு போட்டிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொஹமட் ஆமீர் உலகக் கிண்ண தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு மேலும் கடினமாகியுள்ளது.  

உலகக் கிண்ணத்துக்கான குழாத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த குழாத்தில் ஆமீருக்கு இடம் வழங்கப்படவில்லை. எனினும், ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய வீரர்களை மாற்றிக்கொள்வதற்கு எதிர்வரும் 23ம் திகதிவரை சர்வசே கிரிக்கெட் வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இவ்வாறான நிலையில், மொஹமட் ஆமீர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பிரகாசிக்கும் பட்சத்தில் உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது என்பதை பாகிஸ்தான் அணியின் தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வாறான தருணத்தில் மொஹமட் ஆமீருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளமை, அவரின் உலகக் கிண்ண வாய்ப்புக்கு தடையாக மாறியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆமீர் விளையாடிய போதும், குறித்த போட்டி மழை காரணமாக 19 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.  

இதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், சுகயீனம் காரணமாக அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வைத்தியர்கள் சிகிச்சை மேற்கொண்டதில், ஆமீருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டள்ளது. இதனால், அவர் இன்று (14) நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் நான்காவது ஒருநாள் போட்டிகளில் ஆமிருக்கு விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்திலிருந்து தவறவிடப்பட்ட முன்னணி பதினொருவர்

கிரிக்கெட் வீரர்களின் மிகப் பெரிய கனவு தமது நாட்டின் தேசிய அணிக்காக விளையாடுவது மாத்திரமல்லாது உலகக் கிண்ணத்தை வென்று

ஆமீர் தற்போது, அணி வீரர்களுடன் பயணிக்கவில்லை எனவும், இங்கிலாந்தில் இருக்கும் அவரின் குடும்பத்தாருடன் தங்கியுள்ளார் எனவும் பாகிஸ்தான் அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. எனினும், ஆமீர் இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள 5வதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் விளையாடினால் மாத்திரமே உலகக் கிண்ண குழாத்தில் இடம்பிடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக மொஹமட் ஆமீர் இருந்தாலும், 2017ம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு பின்னர் 101 ஓவர்கள் பந்து வீசி, 5 விக்கெட்டுகளை மாத்திரமே அவர் வீழ்த்தியுள்ளார்.

இதேவேளை, மொஹமட் ஆமீரின் இழப்பு இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணிக்கு ஏற்படும் இரண்டாவது இழப்பாக மாறியுள்ளது. இதற்கு முன்னர், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான், சுகயீனம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I போட்டிகளிலிருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க