அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் 11 ஆண்டுகளுக்கு பின்னர் பிக் பேஷ் லீக்கில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பேஷ் லீக் தொடரை டிசம்பர் 14ஆம் திகதி முதல் ஜனவரி 25ஆம் திகதிவரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
>>முதல் ஆஷஷ் டெஸ்டிலிருந்து வெளியேறும் பெட் கம்மின்ஸ்<<
இதில் கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியாக பிக் பேஷ் லீக்கில் விளையாடியிருந்த மிச்சல் ஸ்டார்க் அதனை தொடர்ந்து போட்டித் தொடரில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். இவர் இறுதியாக சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.
இவ்வாறான நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக்கில் விளையாடுவதற்கு இவர் திட்டமிட்டுள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஷ் தொடர் ஜனவரி 8ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது.
எனவே இதனை தொடர்ந்து உடற்தகுதியை கவனத்தில் கொண்டு சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிச்சல் ஸ்டார்க் T20I கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளதன் காரணமாக இவர் பிக் பேஷ் லீக்கில் விளையாட தீர்மானித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















