அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் T20I கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மிச்சல் ஸ்டார்க் இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தார்.
இலகு வெற்றியுடன் ஒருநாள் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை அணி
அதனை தொடர்ந்து T20I போட்டிகளில் விளையாடாத இவர், அடுத்த ஆண்டு T20 உலகக்கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில் திடீர் ஓய்வை மிச்சல் ஸ்டார்க் அறிவித்துள்ளார்.
மிச்சல் ஸ்டார்க் கடந்த 2012ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20I போட்டியில் அறிமுகமாகி 65 போட்டிகளில் விளையாடி 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரம் அவுஸ்திரேலிய அணி T20 உலகக்கிண்ணங்களை வெல்வதற்கும் முக்கியமான வீரராக இருந்துள்ளார்.
மிச்சல் ஸ்டார்க் T20I கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள போதும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<