இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் முகாமையாளர் மரணம்

64

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் முகாமையாளரான மைக்கல் டி சொய்ஸா தனது 73ஆவது பிறந்த நாளினை இன்று திங்கட்கிழமை (30) கொண்டாடவிருந்த நிலையில் நேற்று (29) மரணமடைந்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நீண்ட காலம் செயற்பட்ட மைக்கல் டி சொய்ஸா, உள்ளூர் கிரிக்கெட் கழகமான SSC இன் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்து பல கிரிக்கெட் வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணியில் வளர்ச்சியடைய காரணகர்த்தவாக இருந்திருந்தார். 

சேஸிங்கில் சதமடித்து நேபாள தலைவர் பரஸ் கட்கா புதிய சாதனை

சர்வதேச இருபதுக்கு 20 (T20i) போட்டிகளில்…..

மைக்கல் டி சொய்ஸா உருவாக்கிய சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னாள் இலங்கை அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க, இலங்கை T20 அணியின் தற்போதைய தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் உதாரணங்களாகும். 

இதேநேரம், மைக்கல் டி சொய்ஸா தான் மரணமடையும் வரைக்கும் இலங்கை கிரிக்கெட் சபையின் ஆலோசகர் குழுவில் ஒரு அங்கத்துவராகவும் செயற்பட்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மைக்கல் டி சொய்ஸாவின் இழப்பிற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களிலிருந்து இந்நாள் வீரர்கள் வரைக்கும் தங்களது இரங்கல்களை தெரிவித்திருந்தனர். 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<