இலகு வெற்றிகளை பதிவு செய்த ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கான்ரிச் பினான்ஸ் அணிகள்

123

பெயார் என்ட் லவ்லி மென் (Fair and Lovely Men) இன் அனுசரணையோடு பிரிவு – B வர்த்தக நிறுவனங்ளுக்கு இடையில் நடைபெறும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் மூன்று போட்டிகள் இன்று (03) நிறைவுற்றது.

கொமர்ஷல் கிரடிட் (B) எதிர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (B)

பணாகொடை இராணுவ மைதானத்தில் முடிந்த இப்போட்டியில், கொமர்ஷல் கிரடிட் அணியினை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

முத்தரப்பு தொடருக்காக இந்தியா செல்லும் இலங்கை கற்புலனற்றோர் கிரிக்கெட் அணி

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய கொமர்ஷல் கிரடிட் அணி சந்தகன் பத்திரன, பெற்றுக் கொண்ட அரைச்சத (69) உதவியுடன் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 194 ஓட்டங்களையே குவித்தது. ஜோன் கீல்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக தரிந்து ரத்னநாயக்க 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 195 ஓட்டங்களை ஜோன் கீல்ஸ் அணியினர் மலிங்க அமரசிங்க (63), ரொஸ்கோ தட்டில் (51) ஆகியோரின் அரைச் சதங்களோடு 41 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றனர். கொமர்ஷல் கிரடிட் அணியின் துடுப்பாட்டத்தில் ஏற்கனவே ஜொலித்த சந்தகன் பத்திரன இம்முறை 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதிலும் வெற்றிக்கு அது போதுமாக இருக்கவில்லை.

போட்டியின் சுருக்கம்

கொமர்ஷல் கிரடிட் (B) – 194 (46.4) – சந்தகன் பத்திரன 69, சனித டி மெல் 36, ஷம்மிக பெரேரா 20, தரிந்து ரத்னநாயக்க 3/50, சசிந்து பெரேரா 2/22

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (B) – 197/6 (41) – மலிங்க அமரசிங்க 63*, ரொஸ்கோ தட்டில் 51, சந்தகன் பத்திரன 4/29

முடிவு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (B) அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி


யுனிலிவர் ஸ்ரீ லங்கா எதிர் CDB வங்கி

MCA மைதானத்தில் முடிந்த இப்போட்டியில், CDB வங்கி அணி யுனிலிவர் ஸ்ரீ லங்கா அணியினை ஒரு விக்கெட்டினால் வீழ்த்தியது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய யுனிலிவர் ஸ்ரீ லங்கா அணி, CDB வங்கி அணியினரின் திறமையான பந்துவீச்சினால் 159 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. CDB வங்கி அணியினரின் பந்துவீச்சு சார்பாக சவின் குணசேகர 3 விக்கெட்டுக்களையும், சந்திம பண்டார மற்றும் இம்ரான் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர், சவால் குறைந்த வெற்றி இலக்கான 160 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய CDB வங்கி அணி ஆரம்பத்தில் தடுமாறிய போதிலும் 49.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை போராடி அடைந்தது.

CDB வங்கி அணியின் வெற்றிக்காக இறுதிவரை போராடிய ஷாலுக்க சில்வா 28 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காது நின்றிருந்தார். இதேநேரம், கிஹான் டி சொய்ஸா மற்றும் கயான் ருபசிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து CBD அணிக்கு அழுத்தம் பிரயோகித்த போதிலும் அது அவர்களது தரப்பின் வெற்றிக்கு உதவியிருக்கவில்லை.

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிக்கும் ஐ.சி.சி

போட்டியின் சுருக்கம்

யுனிலிவர் ஸ்ரீ லங்கா – 159 (48.3) – சசிந்து கொலம்பகே 43, சச்சின் பெர்னாந்து 25, சவின் குணசேகர 3/24, சந்திம பண்டார 2/30

CDB வங்கி – 160/9 (49.3) – தினுஷ்க மாலன் 34, சதுரங்க திக்கும்புர 30, சாலுக்க சில்வா 28*, கிஹான் டி சொய்ஸா 3/17, கயான் ரூபசிங்க 3/19

முடிவு – CDB வங்கி ஒரு விக்கெட்டினால் வெற்றி


ஹட்டன் நஷனல் வங்கி எதிர் கான்ரிச் பினான்ஸ் (B)

கொழும்பு BRC மைதானத்தில் முடிந்த இப்போட்டியில், கான்ரிச் பினான்ஸ் அணி 5 விக்கெட்டுக்களால் ஹட்டன் நஷனல் வங்கியை தோற்கடித்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய ஹட்டன் நஷனல் வங்கி அணியினர் 48.2 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து மோசமான துடுப்பாட்டத்தை காட்டியிருந்தனர். ஹட்டன் நஷனல் வங்கி அணியின் சார்பில் மாதவ வர்ணபுர 43 ஓட்டங்களை குவித்த நிலையில், கான்ரிச் பினான்ஸ் அணிக்காக சந்துல வீரரத்ன 5 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

இதன் பின்னர், ஆட்டத்தின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 151 ஓட்டங்களை கான்ரிச் பினான்ஸ் அணி ரவீன் சேயரின் அரைச்சத உதவியோடு 37.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலகுவான முறையில் அடைந்தது. கான்ரிச் பினான்ஸ் அணியின் வெற்றிக்கு உதவிய ரவீன் சேயர் இறுதிவரை 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நின்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஹட்டன் நஷனல் வங்கி – 150 (48.2) –  மாதவ வர்ணபுர 43, சந்துல வீரரத்ன 5/33, தருஷன் இத்தமல்கொட 2/24

கான்ரிச் பினான்ஸ் (B) – 151/5 (37.3) – ரவீன் சேயர் 63*, பிரமோத் மதுவந்த 29*, நவீன் குணவர்தன 2/24

முடிவு கான்ரிச் பினான்ஸ் (B) அணி  5 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<