இலகு வெற்றியைப் பதிவு செய்த டீஜேய் லங்கா, மாஸ் சிலுவேட்டா அணிகள்

176

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு பிரிவு A வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில், இன்றைய நாளில் (20) இரண்டு போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

சம்பத் வங்கி எதிர் டீஜேய் லங்கா நிறுவனம்

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் டீஜேய் லங்கா நிறுவன அணி சம்பத் வங்கி அணியை 8 விக்கெட்டுக்களால் இலகுவாக தோற்கடித்தது.

மாஸ் சிலுவேட்டா அணிக்கெதிராக டிமோ அணி இலகு வெற்றி

மழையின் இடையூறினால் அணிக்கு 44 ஓவர்களாக குறைக்கப்பட்டு இடம்பெற்ற இந்தப் போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற டீஜேய் லங்கா முதலில் சம்பத் வங்கி அணியை துடுப்பாட பணித்தது. இதனடிப்படையில் துடுப்பாடக் களமிறங்கிய சம்பத் வங்கி அணி தரிந்து கெளசால், ரொமேஷ் புத்திக்க ஆகியோரின் திறமையான ஆட்டத்தின் மூலம் 44 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 177 ஓட்டங்களை குவித்தது. சம்பத் வங்கி அணிக்காக தரிந்து கெளஷால் 51 ஓட்டங்களையும், ரொமேஷ் புத்திக்க 40 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இதேநேரம் டீஜேய் லங்கா அணியின் பந்துவீச்சு சார்பாக சாலிய சமன், இமேஷ் ராமநாயக்க, தேசிய கிரிக்கெட் அணி வீரர் சச்சித்ர சேனநாயக்க ஆகியோர் தலா 2  விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்கான 178 ஓட்டங்களை பெற தமது துடுப்பாட்ட இன்னிங்சை ஆரம்பித்த டீஜேய் லங்கா அணிக்கு சிதார கிம்ஹான அதிரடி சதம் (102*) ஒன்றை பெற்றுத்தந்தார். இவரது துடுப்பாட்ட உதவியோடு டீஜேய் லங்கா அணி 27 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

சம்பத் வங்கி – 177/7 (44) – தரிந்து கெளஷால் 51, ரொமேஷ் புத்திக்க 40, இமேஷ் ராமநாயக்க 2/26,  சச்சித்ர சேனநாயக்க 2/29, சாலிய சமன் 2/32

டீஜேய் லங்கா – 179/2 (27) – சிதார கிம்ஹான 102*, பசிந்து இஷார 30

முடிவு – டீஜேய் லங்கா அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி


மாஸ் சிலுவேட்டா எதிர் கான்ரிச் பினான்ஸ்

மொரட்டுவ மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் மாஸ் சிலுவேட்டா அணி கான்ரிச் பினான்ஸ் அணியினை 102 ஓட்டங்களால் அபாரமான முறையில் தோற்கடித்தது.

தமது கடைசிப் போட்டியில் டிமோ அணியிடம் தோல்வியடைந்த மாஸ் சிலுவேட்டா வீரர்கள் வெற்றி ஒன்றினை எதிர்பார்த்த வண்ணம் இப்போட்டியில் களமிறங்கியிருந்தனர். மழையின் இடையூறு இப்போட்டியிலும் இருந்த காரணத்தினால் அணிக்கு 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் ஆரம்பமானது.

இந்தியாவிடம் இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு மீண்டும் தோல்வி

போட்டியில் எதிரணியினால் பணிக்கப்பட்டு முதலில் துடுப்பாடிய மாஸ் சிலுவேட்டா அணி 43 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை 227 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

மாஸ் சிலுவேட்டா அணியில் அதிகபட்ச ஓட்டங்களை இறுதிவரை ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களுடன் அஞ்சலோ இமானுவேல் பெற அலங்கார அசங்க 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கான்ரிச் பினான்ஸ் அணிக்காக கைப்பற்றினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 228 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கான்ரிச் பினான்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டி கடைசியில் 31.3 ஓவர்களுக்கு 125 ஓட்டங்களுக்கு அனைத்து  விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் தோல்வியைத் தழுவியது.

முன்னர் துடுப்பாட்டத்தில் ஜொலித்திருந்த அஞ்செலோ இமானுவேல் இம்முறை 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி மாஸ் சிலுவேட்டா அணியின் வெற்றியை பந்துவீச்சு, துடுப்பாட்டம் என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டு உறுதி செய்தார்.

போட்டியின் சுருக்கம்

மாஸ் சிலுவேட்டா – 227/9 (43) – அஞ்செலோ இமானுவேல் 73*, துஷான் ஹேமந்த 37, அலங்கார அசங்க 2/21

கென்ரிச் பினான்ஸ் – 125 (31.3) – சரங்க ராஜகுரு 32, பத்தும் நிசங்க 29*, அஞ்செலோ இமானுவேல் 2/07

முடிவு – மாஸ் சிலுவேட்டா அணி 102 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க