விறுவிறுப்பான போட்டியில் த்ரில் வெற்றிபெற்ற கென்ரிச் பினான்ஸ் அணி

155

யுனிலிவரின் முக பராமரிப்பு நாமமான பெயார் எண்ட் லவ்லி மென் (Fair & Lovely Men) அனுசரணையுடன் இன்று ஆரம்பமாகியுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான பிரிவு B (டிவிஷன் –  B) அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் கென்ரிச் பினான்ஸ் (B) அணி இலகு வெற்றியை பெற்றுக்கொண்டது.

இலங்கை ஒருநாள் குழாமிலிருந்து மெதிவ்ஸ்,மெண்டிஸ் நீக்கம் : குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள…

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான பிரிவு B போட்டித் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் மற்றும் யுனிலிவர் ஸ்ரீலங்கா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவிருந்த புலூம் பீல்ட் மைதானத்தில் ஈரத்தன்மை அதிகமாக இருந்ததால் குறித்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பனாகொடை இராணுவ மைதானத்தில் நடைபெற்ற கென்ரிச் பினான்ஸ் மற்றும் எக்ஸ்போ லங்கா ஹோல்டிங் (A) அணிகள் மோதிய போட்டி குறைந்த ஓட்டங்கள் கொண்ட போட்டியாக முடிவுக்கு வந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற எக்ஸ்போ லங்கா ஹோல்டிங் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி ஆடிய அந்த அணியால் 50 ஓவர்கள் துடுப்பெடுத்தாட முடியாமல் போக, 33 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

கென்ரிச் பினான்ஸ் அணியின் சந்துல வீரரத்னவின் பந்துவீச்சுக்கு தடுமாறிய எக்ஸ்போ லங்கா ஹோல்டிங் அணி சார்பில், நதீர நாவல 38 ஓட்டங்களையும், டிலான் ஜயலத் 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, சந்துல வீரரத்ன 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், தரூஷன் இடமல்கொட 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், 125 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கிய கென்ரிச் பினான்ஸ் அணி கடுமையாக போரடிய நிலையில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பில் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட தரூஷன் இடமல்கொட அரைச்சதத்தை தவறவிட்ட போதிலும், 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

வர்த்தக நிறுவன கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் தேசிய அணி வீரர்கள்

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26 ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒருநாள்…

இவருக்கு அடுத்தப்படியாக தசுன் செனவிரத்ன 33 ஓட்டங்களை பெற்றதுடன், எக்ஸ்போ லங்கா அணியின் பந்து வீச்சில் டிலான் ஜயலத் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஹசான் ஷாஸ்த்ரி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்றைய போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கென்ரிச் பினான்ஸ் அணி, இந்த பருவகாலத்திற்கான தங்களுடைய முதல் வெற்றியினை இன்று பதிவுசெய்துள்ளது.

போட்டி சுருக்கம்

எக்ஸ்போ லங்கா ஹோல்டிங் – 125 (33), நதீர நாவல 38, டிலான் ஜயலத் 23, சந்துல வீரரத்ன 41/5, தரூஷன் இடமல்கொட 19/3

கென்ரிச் பினான்ஸ் – 128/9 (40.1), தரூஷன் இட்டமல்கொட 49, தசுன் செனவிரத்ன 33, டிலான் ஜயலத் 33/3, ஹசான் ஷாஸ்த்ரி 26/2

போட்டி முடிவுகென்ரிச் பினான்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<