குஜராத் டைடன்ஸ் அணிக்கு புதிய தலைவர்

IPL 2024

308

2024ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரில் குஜராத் டைடன்ஸ் அணியின் தலைவராக சுப்மான் கில் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

ஓட்டங்களின்றி 8 விக்கெட்டுக்கள் சாய்த்த கொழும்பு இந்துக் கல்லூரி வீரர்

குஜராத் டைடன்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட ஹார்திக் பாண்டியவை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பரிமாற்றம் மூலம் தமது குழாத்திற்குள் உள்வாங்கியதனை அடுத்தே, குஜராத் டைடன்ஸ் அணியின் புதிய தவைராக சுப்மான் கில் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

சுப்மான் கில்லினை தலைவராக நியமனம் செய்த விடயமானது குஜராத் டைடன்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் விக்ரம் சோலங்கி மூலமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

சுப்மான் கில் கடந்த 2022ஆம் ஆண்டு குஜராத் டைடன்ஸ் அணி IPL சம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக மாறியதோடு, அவர் இறுதியாக நடைபெற்ற IPL தொடரிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். குஜராத் டைடன்ஸ் அணிக்காக இதுவரை 33 போட்டிகளில் ஆடியிருக்கும் சுப்மான் கில் 1373 ஓட்டங்களை குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

IPL அணிகள் தங்களுக்கான வீரர்களை பரிமாற்றம் செய்து வருகின்ற இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு IPL தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<