தசுன் ஷானகவின் நிதான ஆட்டத்தால் சம்பத் வங்கி அணிக்கு வெற்றி

86

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27ஆவது சிங்கர் – MCA ப்ரீமியர் லீக் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (7) நடைபெற்ற மாஸ் ஹோல்டிங் யுனிச்செல்லா அணிக்கு எதிரான போட்டியில் சம்பத் வங்கி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

பானுக, அஷேனின் பிரகாசிப்பால் ஜோன் கீல்ஸ் அணிக்கு வெற்றி

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27…

கொழும்பு பி.சரா. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சம்பத் வங்கி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி, களமிறங்கிய மாஸ் யுனிச்செல்லா அணி ஆரம்பத்தில் சிறந்த இணைப்பாட்டத்தை வெளிப்படுத்திய போதும், பின்னர், விக்கெட்டுகளை பறிகொடுத்ததில் 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இதில், தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இவருக்கு அடுத்தப்படியாக நிரோஷன் டிக்வெல்ல 30 ஓட்டங்களையும், குசல் பெரேரா 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஹசந்த பெர்னாண்டோ மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Photos: Sampath Bank vs MAS Unichela | 27th Singer-MCA Premier League 2020

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்பத் வங்கி அணி சமீன் கந்தனராச்சி மற்றும் சந்துன் வீரகொடி ஆகியோரின் வேகமான ஓட்டக்குவிப்புடன் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. பின்னர், தசுன் ஷானக அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்த 30.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து சம்பத் வங்கி அணி வெற்றியிலக்கை அடைந்தது.

சம்பத் வங்கி அணி சார்பில் அதிகபட்சமாக சந்துன் வீரகொடி மற்றும் சமீன் கந்தனராச்சி ஆகியோர் தலா 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, போட்டியில் இறுதிவரை போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தசுன் ஷானக 41 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் நுவான் துஷார 56 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, லஹிரு மதுசங்க 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டி சுருக்கம்

மாஸ் யுனிச்செல்லா – 190/10 (45), கமிந்து மெண்டிஸ் 65, நிரோஷன் டிக்வெல்ல 30, குசல் பெரேரா 21, ஹசந்த பெர்னாண்டோ 3/32, விஷ்வ பெர்னாண்டோ 3/34

சம்பத் வங்கி –  191/6 (30.3), சமீன் கந்தனராச்சி 46, சந்துன் வீரகொடி 46,  தசுன் ஷானக 41*, நுவான் துஷார 3/56, லஹிரு மதுசங்க 2/47

முடிவு – சம்பத் வங்கி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<