அபுதாபி T10 லீக்கின் சம்பியனான வனிந்துவின் டெக்கான் கிளேடியேட்டர்ஸ்

2109
 

2021ஆம் ஆண்டின் அபுதாபி T10 லீக் தொடரில் இலங்கையின் வனிந்து ஹஸரங்க இடம்பெற்ற டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணி, டெல்லி புல்ஸ் அணியினை வீழ்த்தி சம்பியனாக மாறியிருக்கின்றது.

LPL தொடரின் இரண்டாவது கிண்ணத்தை குறிவைக்கும் ஜப்னா!

அபுதாபி T10 லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (04) அபுதாபி ஷேக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், குறித்த போட்டியில் டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணி 56 ஓட்டங்களால், டெல்லி புல்ஸ் அணியினை வீழ்த்தியே சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணி 10 ஓவர்கள் நிறைவில் விக்கெட் எதனையும் பறிகொடுக்காமல் 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் வெறும் 32 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட அன்ட்ரே ரசல் 9 பௌண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கலாக 90 ஓட்டங்களை குவித்திருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 160 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி புல்ஸ் அணி 10 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

டெல்லி புல்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில், சந்தர்போல் ஹேமராஜ் 20 பந்துகளுக்கு 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெல்லி புல்ஸ் அணியினை நெருக்கடிக்கு உள்ளாக்கிய வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தோடு, அந்த விக்கெட்டுக்களின் துணையுடன் இந்த அபுதாபி T10 லீக்கில் மொத்தமாக 21 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்டுக்கள் எடுத்த வீரராக மாறியிருந்தார்.

இலங்கையிடம் படுதோல்வியடைந்த இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி

அதோடு அபுதாபி T10 லீக்கின் தொடர் நாயகன் விருதும் வனிந்து ஹஸரங்கவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

டெக்கான் கிளேடியேட்டர்ஸ் – 159/0 (10) அன்ட்ரூ ரசல் 90*, கோஹ்லர்-கட்மோர்

59* டெல்லி புல்ஸ் – 103/7 (10) சந்தர்போல் ஹேமராஜ் 42, டைமால் மில்ஸ் 4/2, வனிந்து ஹஸரங்க 20/2

முடிவு – டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணி 56 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு<<