இந்தியாவிலிருந்து வெளியேறும் டேவிட் வோர்னர்!

Australia tour of India 2023

127

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் நீக்கப்பட்டுள்ளார்.

டேவிட் வோர்னரின் முழங்கை பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர் சிட்னிக்கு பயணித்து சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்க தொடருக்கான மே.தீவுகள் ஒருநாள், T20i குழாம்கள் அறிவிப்பு

டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மொஹமட் சிராஜ் வீசிய பந்து ஒன்று டேவிட் வோர்னரின் முழங்கை பகுதியில் தாக்கியிருந்தது. இதனையடுத்த இரண்டு ஓவர்களில் மீண்டும் வோர்னரின் தலையில் பந்து தாக்கியிருந்தது.

குறித்த இந்த பந்து தாக்குதல்களின் பின்னர் ஆட்டமிழந்த டேவிட் வோர்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மெட் ரென்சோவ் மாற்றீடு வீரராக களமிறங்கி விளையாடியிருந்தார்.

தற்போது இந்தியாவிலிருந்து டேவிட் வோர்னர் வெளியேறினாலும், மார்ச் மாதத்தில் இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக மீண்டும் அணியுடன் இணைந்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டேவிட் வோர்னர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள போதும், மேலதிக வீரர்களை அவுஸ்திரேலிய அணி அறிவிக்கவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டிராவிஷ் ஹெட் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உபாதைக்கு முகங்கொடுத்திருந்த சகலதுறை வீரர் கிரிஸ் கிரீன் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<