மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணிக்குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
>>ஆஷஸ் முதல் டெஸ்ட் குழாத்தில் மார்னஸ் லபுச்சேன்<<
அறிவிக்கப்பட்டிருக்கும் நியூசிலாந்து குழாத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் தசை உபாதை காரணமாக விளையாட முடியாமல் போன ஹென்ரி, முழு உடற்தகுதி பெற்று அணிக்குத் திரும்பியுள்ளார்.
எனினும் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில், நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
மேலும் மொஹமட் அப்பாஸ், பின் அலன், லோக்கி பெர்குசன், அடம் மில்னே, வில் ஓ’ரூர்க், கிளன் பிலிப்ஸ் மற்றும் பென் சீயர்ஸ் உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக நியூசிலாந்து ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை.
அதேவேளை இந்த ஒருநாள் தொடருக்கு சகலதுறைவீரரான மிச்சல் சான்ட்னர் தலைவராக செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இடையேயான ஒருநாள் தொடர் நவம்பர் 16ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து ஒருநாள் குழாம்
மிச்சல் சான்ட்னர் (தலைவர்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சப்மன், டெவோன் கொன்வே, ஜேக்கப் டபி, சாக் பௌல்க்ஸ், மேட் ஹென்ரி, கைல் ஜேமிசன், டொம் லேதம் (விக்கெட்காப்பாளர்), டேரைல் மிச்சல், ரச்சின் ரவீந்திரா, நதன் ஸ்மித், ப்ளைர் டிக்னர், வில் யங்.
ஒருநாள் தொடர் அட்டவணை
முதல் ஒருநாள் போட்டி: நவம்பர் 16, கிறிஸ்ட்சர்ச்
இரண்டாவது ஒருநாள் போட்டி: நவம்பர் 19, நேப்பியர்
மூன்றாவது ஒருநாள் போட்டி: நவம்பர் 22, ஹமில்டன்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















