Home Tamil ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது வெற்றி

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது வெற்றி

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

431
Photo Courtesy: SLC

லங்கா ப்ரீமியர் லீக்கில் (LPL) இன்று (03) நடைபெற்று முடிந்த கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தோல்வியுறாத அணியாக வலம் வருகின்றது.

போட்டியில், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் சஹிட் அப்ரிடி விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக பானுக ராஜபக்ஷ அணியின் தலைவராக செயற்பட்டார். அத்துடன், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

LPL தொடரின் பாதியில் திடீரென பாகிஸ்தான் செல்லும் சஹிட் அப்ரிடி!

ஜப்னா ஸ்டாலியன்ஸ் – அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக, டொம் மூர்ஸ், தனன்ஜய டி சில்வா, சொஹைப் மலிக், சதுரங்க டி சில்வா, திசர பெரேரா (தலைவர்), வனிந்து ஹசரங்க, சதுரங்க டி சில்வா, உஸ்மான் ஷின்வாரி, டுவானே ஒலிவியர் 

கோல் க்ளேடியேட்டர்ஸ் – தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ஷ (தலைவர்), தனன்ஜய லக்ஷான், அஷாம் கான், அஹ்சன் அலி, செட்விக் வோல்டன், செஹான் ஜயசூரிய, லக்ஷான் சந்தகன், மொஹமட் ஆமிர், அகில தனன்ஜய, அசித பெர்னாண்டோ

இந்தப் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாத நிலையில், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியில் 4 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு தனுஷ்க குணதிலக்க சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த போதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சரியான முறையில் பங்களிப்பை வழங்கவில்லை. மத்தியவரிசையில், செட்விக் வோல்டன் மாத்திரம் அதிரடியாக ஆடி, வேகமாக ஓட்டங்களை பெற்றார்.

இவர்களின் பங்களிப்புடன் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தனுஷ்க குணதிலக்க 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில், செட்விக் வோல்டன் 31 ஓட்டங்கள், அஹ்சம் அலி 29 ஓட்டங்கள் மற்றும் அஷாம் கான்  25 ஓட்டங்கள் என பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 171 என்ற வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி அவிஷ்க பெர்னாண்டோவின் அதிரடி துடுப்பாட்டம் மற்றும் மினோத் பானுகவின் இணைப்பாட்ட பங்களிப்புடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ அதிகபட்சமாக 84 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, மினோத் பானுக 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இறுதியாக வனிந்து ஹசரங்க 7 பந்துகளில் 17 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். பந்துவீச்சில், அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக, புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் தொடந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி, லங்கா ப்ரீமியர் லீக்கில் இதுவரை ஒரு வெற்றியையும் பதிவுசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Result


Galle Gladiators
170/6 (20)

Jaffna Kings
174/5 (19.4)

Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka c Duanne Olivier b Wanindu Hasaranga 56 44 7 0 127.27
Ahsan Ali c & b Wanindu Hasaranga 29 25 4 0 116.00
Azam Khan c Wanindu Hasaranga b Suranga Lakmal 25 14 2 2 178.57
Bhanuka Rajapakse c Thisara Perera b Dhananjaya de Silva 1 2 0 0 50.00
Chadwick Walton c Tom Moores b Usman Shinwari 31 14 1 3 221.43
Shehan Jayasuriya run out (Avishka Fernando) 8 13 0 0 61.54
Dhananjaya Lakshan not out 14 10 2 0 140.00


Extras 6 (b 0 , lb 1 , nb 2, w 3, pen 0)
Total 170/6 (20 Overs, RR: 8.5)
Did not bat Asitha Fernando, Mohammad Amir, Akila Dananjaya, Lakshan Sandakan,

Bowling O M R W Econ
Usman Shinwari 4 0 44 1 11.00
Dhananjaya de Silva 4 0 27 1 6.75
Suranga Lakmal 2 0 18 1 9.00
Duanne Olivier 2 0 23 0 11.50
Wanindu Hasaranga 4 0 29 2 7.25
Thisara Perera 1 0 11 0 11.00
Shoaib Malik 3 0 17 0 5.67


Batsmen R B 4s 6s SR
Tom Moores b Shehan Jayasuriya 11 12 1 1 91.67
Avishka Fernando c Shehan Jayasuriya b Dhananjaya Lakshan 84 59 7 5 142.37
Minod Bhanuka c Dhananjaya Lakshan b Asitha Fernando 40 26 4 1 153.85
Thisara Perera c Lakshan Sandakan b Asitha Fernando 9 9 1 0 100.00
Shoaib Malik c Dhananjaya Lakshan b Akila Dananjaya 1 3 0 0 33.33
Wanindu Hasaranga not out 17 7 4 0 242.86
Dhananjaya de Silva not out 5 2 1 0 250.00


Extras 7 (b 0 , lb 1 , nb 0, w 6, pen 0)
Total 174/5 (19.4 Overs, RR: 8.85)
Did not bat Chathuranga de Sliva, Usman Shinwari, Duanne Olivier, Suranga Lakmal,

Bowling O M R W Econ
Mohammad Amir 4 0 37 0 9.25
Shehan Jayasuriya 3 0 20 1 6.67
Asitha Fernando 4 0 30 2 7.50
Akila Dananjaya 3.4 0 42 1 12.35
Dhananjaya Lakshan 3 0 24 1 8.00
Lakshan Sandakan 2 0 20 0 10.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<