இலங்கை – ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் இந்திய நடுவர்

Afghanistan Tour of Sri Lanka 2022

217

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான போட்டி மத்தியஸ்தர் மற்றும் நடுவர் குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, மூன்று போட்டிகளுக்குமான போட்டி மத்தியஸ்தராக, ஐசிசியின் பிரதம போட்டி மத்தியஸ்தர்களில் ஒருவராக உள்ள ரன்ஜன் மடுகல்ல பணியாற்றவுள்ளார்.

இதேநேரம் மூன்று ஒருநாள் போட்டிகளுக்குமான நடுவர் குழாத்தில் நால்வர் இடம்பெற்றுள்ளனர். ருச்சிர பல்லியகுருகே, லிண்டன் ஹெனிபல், ரவீந்திர விமலசிறி மற்றும் இந்திய நாட்டவரான நிதின் மேனன் ஆகிய நடுவர்கள் இந்த போட்டித்தொடர் முழுவதும் நடுவர்களாக கடமையாற்றவுள்ளனர்.

>> இலங்கை வரும் ஆப்கானிஸ்தான் அணி; போட்டி அட்டவணை வெளியானது!

இதனிடையே, கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச தொடர்களில் பிரதான நடுவர்களில் ஒருவராக பணியாற்றிய, ஐசிசியின் நடுவர் குழாத்தைச் சேர்ந்த இலங்கையரான குமார் தர்மசேன, ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள நடுவர்கள் குழாத்தில் இடம்பெறவில்லை.

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் தொடருக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் 27ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், குறித்த மூன்று போட்டிகளும் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி மத்தியஸ்தர் – ரன்ஜன் மடுகல்ல

நடுவர்கள் – ருச்சிர பல்லியகுருகே (இலங்கை), லிண்டன் ஹெனிபல் (இலங்கை), ரவீந்திர விமலசிறி (இலங்கை) மற்றும் நிதின் மேனன் (இந்தியா)

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<