ஆஷஸ் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகும் மார்க் வூட்

6

அவுஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட், முழங்கால் உபாதை காரணமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

ஆஷஸ் தொடரில் இருந்து வெளியேறும் ஜோஸ் ஹேசல்வூட்

35 வயது நிரம்பிய மார்க் வூட், பெர்த் நகரில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் போது இடது முழங்காலில் உபாதைக்கு முகம் கொடுத்திருந்தார். இதனால் முதல் டெஸ்டில் 11 ஓவர்கள் மட்டுமே வீசிய மார்க் வூட், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே மார்க் வூடின் விலகல் அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. 

அத்துடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 2-0 என ஏற்கனவே முன்னிலை அடைந்திருக்க, மார்க் வூடின் இழப்பானது இங்கிலாந்திற்கு பேரிடியாக மாறியிருக்கின்றது 

அதேநேரம் மார்க் வூடிற்குப் பதிலாக சர்ரே கழகத்தின் வேகப்பந்து வீச்சாளரான மெதிவ் பிஷர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் காணப்படும் பிஷர், உடனடியாக இங்கிலாந்து அணியுடன் இணைவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பிஷர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 

இங்கிலாந்துஅவுஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இம்மாதம் 17ஆம் திகதி அடிலைடில் ஆரம்பமாகுகின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<