மன்னார் மாவட்ட கிரிக்கெட்டில் ஒரு புது உதயமாக வரும் ‘மன்னார் சுப்பர் லீக்’

321

மன்னார் மாவட்ட கிரிக்கெட்டின் ஒரு புதிய முயற்சியாக மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் மன்னார் சுப்பர் லீக் (Mannar Super League) எனும் மாபெரும் T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

එශානි ලොකුසූරිය නැවතත් ශ්‍රී ලංකා විස්සයි විස්ස සංචිතයට

ඉන්දීය කණ්ඩායමට එරෙහිව අද (19) ආරම්භ වන තරග තුනකින් සමන්විත විස්සයි

லீக் முறையில் நடைபெறவுள்ள இந்த சுற்றுத்தொடரில் மொத்தமாக நான்கு அணிகள் பங்குற்றவுள்ளதுடன் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் இரண்டு தடவைகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த நான்கு அணிகளும் மன்னார் மாவட்டத்தில் உள்ள முக்கிய நான்கு பகுதிகளை குறிப்பிடும் வகையில் உள்ளன.  

இதற்கமைவாக, நான்கு அணிகளும் வெவ்வேறு உரிமையாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

மன்னார் சுப்பர் லீக் தொடரில் பங்கு கொள்ளும் அணிகள் மற்றும் அணி உரிமையாளர்களின் விபரங்கள்

  அணியின் பெயர் உரிமையாளர்கள்

  1. மாந்தை கோப்ராஸ் AA Sports Shop
  2. மன்னார் பைடர்ஸ் திரு.ஜெயக்குமார், திரு.ஜெரோமி
  3. மடு பீனிக்ஸ் திரு.அருள்
  4. நாநாட்டான் ஈகில்ஸ் திரு.அஜித், திரு.குமார்

பிரமாண்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடரில் மோதும் அணிகளுக்கான வீரர்கள் தெரிவானது ஏலம் மூலம் வருகின்ற மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 6.00 மணிக்கு மன்னார் ஆகாஷ் ஹொட்டலில் நடைபெறவுள்ளது.  

லக்கி ஸ்ராரை வீழ்த்தி FA கிண்ண அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது சென் நீக்கிலஸ்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த பருவகாலத்திற்கான FA கிண்ண

இதன்போது, சுற்றுப் போட்டியில் பங்கு கொள்ளும் வீரர்களை உள்வாங்குவதற்கான ஏலத்தைத் தொடர்ந்து நான்கு அணிகளுக்குமுறிய சீருடை அறிமுகமும், தொடரின் சம்பியன் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக் கிண்ண அறிமுகமும் இடம்பெறவுள்ளன.

மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழக வீரர்கள் மாத்திரமே இந்த சுற்றுப் போட்டியில் விளையாடுவதற்காக குறித்த ஏலத்தில் பங்குபற்ற முடியும். இதற்காக வீரர்களின் சம்மதத்தினை தெரிவிப்பதற்கான விண்ணப்பபடிவம் ஒன்று மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் தயாரித்து வழங்கப்படுகின்றது. குறித்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (30-09-2018) என அறிவிக்கப்பட்டுள்ளது.  

உரிமையாளர் ஒருவர், வீரர்களின் விருப்பத்திற்கமைவாக பதிவுசெய்யப்பட்ட கழக வீரர் ஒருவரையும், பாடசாலை வீரர் ஒருவரையும் ஏலமின்றி தனது அணியில் வைத்துக்கொள்ள முடியும். இந்த சுற்றுப் போட்டியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தொடருக்கான ஊடக அனுசரணையை இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com வழங்கவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க