மிலிந்த சிறிவர்தனவின் சதத்துடன் முன்னிலை பெற்ற செரசன்ஸ் கழகம்

323
 

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரில் இன்று (17) செரசன்ஸ் மற்றும் பதுரெலிய கழகங்களுக்கிடையிலான போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்றது.

தமிழ் யூனியன் கழகத்திற்காக சதம் கடந்த தரங்க பரணவிதான

இதில், செரசன்ஸ் கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இலங்கை அணியின் அனுபவமிக்க சகலதுறை ஆட்டக்காரரான மிலிந்த சிறிவர்தன சதம் கடந்து 175 ஓட்டங்களைக் குவிக்க, சாமிகர எதிரசிங்க மற்றும் பிரமோத் மதுவன்த ஆகியோர் அரைச்சதங்களை குவித்தனர்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி மக்கோன சர்ரே மைதானத்தில் நேற்று (16) ஆரம்பமாகியது.

போட்டியின் நாயண சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய செரசன்ஸ் கழகம், அணித் தலைவர் மிலிந்த சிறிவர்தன பெற்றுக்கொண்ட 175 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்ஸுக்காக 9 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 428 ஓட்டங்களப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மிலிந்த சிறிவர்தன ஒரு சிக்ஸர் மற்றும் 19 பௌண்டரிகளுடன் 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இதில் 4ஆவது விக்கெட்டுக்காக கமிந்து அமரசிங்கவுடன் 65 ஓட்டங்களையும், 5ஆவது விக்கெட்டுக்காக அஷேன் பண்டாரவுடன் 98 ஓட்டங்களையும் இணைப்பட்டமாகப் பெற்றுக்கொண்ட மிலிந்த சிறிவர்தன, சாலிய சமனுடன் 7ஆவது விக்கெட்டுக்காக 79 ஓட்டங்களையும் இணைப்பட்டாமப் பெற்று அவ்வணிக்கு வலுச்சேர்த்தார்.

தமிழ் யூனியன் கழகத்திற்காக சதம் கடந்த தரங்க பரணவிதான

றுதி விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சாமிகர எதிரசிங்க 53 ஓட்டங்களையும், பிரமோத் மதுவன்த 52 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்று ஆடுகளத்தில் இருந்தனர்.

பந்துவீச்சில் புத்திக சன்ஜீவ மற்றும் சச்சித் பத்திரன ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

இதனையடுத்து, தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள பதுரெலிய கிரிக்கெட் கழக அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) –  428/9d (147.1) – மிலிந்த சிறிவர்த்தன 175, சாமிகர எதிரிசிங்க 53*, பிரமோத் மதுவன்த 52*, அண்டி சோலமன்ஸ் 36, அஷேன் பண்டார 33, கமிந்து கனிஷ்க 29, சாலிய சமன் 27, புத்திக சன்ஜீவ 3/92, சச்சித் பத்திரன 3/120, அலங்கார அசங்க 2/78

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) –  63/2  (33)சாலிந்த உஷான் 32*, ஷிரான் ரத்னாயக்க 24

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க