உள்ளூர் கழக ஒரு நாள் தொடரில் காலிறுதியில் மோதவுள்ள அணிகள்

1163

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) நடாத்தும் 2017/2018 பருவகாலத்துக்கான பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகியது.

23 கழகங்களின் பங்குபற்றலுடன் நடைபெற்று வருகின்ற இம்முறை போட்டித் தொடரில் அணிகள் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில், முதல் சுற்றுக்கான அனைத்துப் போட்டிகளும் நேற்று(18) நிறைவுக்கு வந்தன.

உள்ளூர் ஒருநாள் போட்டிகளின் காலிறுதி அணிகள் தேர்வு

இலங்கை உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான பிரதான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் காலிறுதிக்கான எட்டு அணிகளும் தேர்வு பெற்றுள்ளன………

இதன்படி, உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களையும் பெற்றுக்கொண்ட அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.

இதில் என்சி.சி, எஸ்.எஸ்.சி, சிலாபம் மேரியன்ஸ், தமிழ் யூனியன், பி.ஆர்.சி, ராகம, கோல்ட்ஸ், செரசன்ஸ், கிரிக்கெட் கழகங்கள் கடைசி எட்டு இடங்களுக்குள் தெரிவாகியதுடன், பிரபல ப்ளும்பீல்ட், சோனகர் மற்றும் இராணுவ கிரிக்கெட் கழகங்கள் குழுநிலை போட்டிகளுடனேயே வெளியேறின.

அதிலும் குறிப்பாக, அண்மையில் நிறைவுக்கு வந்த உள்ளூர் கழகங்களுக்கிடையிலான டி-20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட, கொழும்பு கிரிக்கெட் கழகம், சி பிரிவிற்கான குழு நிலைப் போட்டியில் 2இல் வெற்றியையும், 2 தோல்வியையும் சந்தித்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. அத்துடன், இலங்கை விமானப் படை விளையாட்டுக் கழத்திடம் அடைந்த அதிர்ச்சித் தோல்வியினால் காலிறுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பையும் அந்த அணி இழந்தது. இதன்படி, குறித்த பிரிவல், என்.சி.சி மற்றும் பி.ஆர்.சி ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தெரிவாகின.

இதேநேரம், தினேஸ் சந்திமால், உபுல் தரங்க, லசித் மாலிங்க மற்றும் பர்வீஸ் மஹ்ரூப் உள்ளிட்ட தேசிய அணி வீரர்களைக் கொண்ட பிரபல அணியான என்.சி.சி, அண்மையில் நிறைவுக்குவந்த உள்ளுர் டி-20 தொடரில் கிண்ணத்தை கைப்பற்றியது போல இம்முறை ஒரு நாள் போட்டித் தொடரையும் வெற்றி கொள்ளும் முனைப்பில் காலிறுதியில் களமிறங்கவுள்ளது.

புலியின் வாயிலிருந்து வெற்றியைப் பறித்த தமிழக நட்சத்திரம் கார்த்திக்!

கடைசி இரண்டு ஓவர்களிலும் தனது துடுப்பாட்டத்தால் சாகசம் நிகழ்த்திய தினேஷ் …

இந்நிலையில், உள்ளூர் கழகங்களுக்கிடையிலான காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று(19) வெளியிட்டது.

போட்டி அட்டவணை –

மார்ச் 21

போட்டிஅணிகள்இடம்
காலிறுதிப் போட்டி -1செரசென்ஸ் எதிர் தமிழ் யூனியன்கட்டுநாயக்க மைதானம்
காலிறுதிப் போட்டி -2சிலாபம் மேரியன்ஸ் எதிர் பி.ஆர்.எசிபி.சரவணமுத்து மைதானம்
காலிறுதிப் போட்டி -3என்.சி.சி எதிர் கோல்ட்ஸ்எஸ்.எஸ்.சி மைதானம்
காலிறுதிப் போட்டி -4ராகம எதிர் எஸ்.எஸ்.சிகோல்ட்ஸ் மைதானம்

 

மார்ச் 23

போட்டிஅணிகள்இடம்
முதலாவது அரையிறுதிகாலிறுதிப் போட்டி 1 வெற்றியாளர் எதிர் காலிறுதிப் போட்டி 3 வெற்றியாளர்கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்
இரண்டாவது அரையிறுதிகாலிறுதிப் போட்டி 2 வெற்றியாளர் எதிர் காலிறுதிப் போட்டி 4 வெற்றியாளர்கட்டுநாயக்க மைதானம்

 

மார்ச் 25

இறுதிப் போட்டி – எஸ்.எஸ்.சி மைதானம்