இலங்கையின் முன்னணி கிரிக்கெட் கழகங்களின் மகளிர் அணிகள் பங்கெடுக்கும் மகளிர் மேஜர் கழக ஒருநாள் கிரிக்கெட் தொடர், நாளை (30) தொடக்கம் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்துவீச்சு சகலதுறை வீரரினை இணைக்கும் இங்கிலாந்து
அந்தவகையில் ஜூலை 30 தொடக்கம் ஒகஸ்ட் 15 வரை நடைபெறவுள்ள இந்த தொடரில், மொத்தமாக இலங்கையின் 10 முன்னணி கிரிக்கெட் கழகங்கள் பங்கெடுக்கவிருக்கின்றன.
நாடுபூராகவும் கிரிக்கெட்டில் திறமை கொண்ட வீராங்கனைகளை இனம் காண்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த தொடரில் பங்கெடுக்கும் அணிகளாக சிலாபம் மேரியன்ஸ், இராணுவப்படை, பதுரெலிய, கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் மகளிர் கழகங்கள் காணப்படுவதோடு இவற்றுக்கு மேலதிகமாக SSC, CCC, Ace Capital CC, Colombo Cricket Club மற்றும் பாணதுறை விளையாட்டுக் கழகம் ஆகியவை உள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<