உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஒத்திவைப்பு

209
Sri Lanka Club Cricket

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் தடைப்பட்டிருந்த பிரதான கழகங்களுக்கு இடையிலான முதல் தரப் போட்டிகளை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், போட்டித் தொடரின் அட்டவணையில் மேற்கொள்ளப்படவுள்ள ஒருசில மாற்றங்கள் தொடர்பில் விசேட பொதுச்சபை கூட்டமொன்றை நடத்தி அனைத்து கழகங்களினதும் அனுமதியைப் பெற்றுக் கொள்ள இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இலங்கையில் உள்ளூர் போட்டிகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட்டின் 2019-20 ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான உள்ளூர்

இதன் காரணமாக, 14 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளை காலவரையரையின்றி ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று (10) அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2019/2020 ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான உள்ளூர் முதல் தர கழங்களுக்கு இடையிலான போட்டித் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவுக்கு வந்தன.

எனினும், கொரோனா வைரஸ் காரணமாக எட்டு அணிகள் பங்குகொள்ளும் சுப்பர் 8 சுற்று மற்றும் கேடயத்துக்கான சுற்றுப் போட்டிகள் மாத்திரம் கடந்த 3 மாதங்களாக நடைபெறவில்லை.

இந்த நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடையத் தொடங்கியதை அடுத்து கிரிக்கெட், கால்பந்து, றக்பி உள்ளிட்ட விளையாட்டுக்களை ஆரம்பிக்க விளையாட்டுத்துறை அமைச்சு அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த ஜுன் மாதம் இரண்டு கட்டங்களாக வதிவிட பயிற்சி முகாம்களில் கலந்துகொண்டனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்த உள்ளூர் முதல் தரப் போட்டிகளை ஜுலை 14 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சிடம் இலங்கை கிரிக்கெட் சபை கோரிக்கை விடுக்க, அதற்கான அனுமதியும் கடந்த வாரம் வழங்கப்பட்டது.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 122

ஆட்டநிர்ணய விசாரணைப் பிரிவை திக்குமுக்காட வைத்த சங்கக்கார

இது இவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்த உள்ளூர் முதல் தரப் போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க முன் போட்டி அட்டவணை மற்றும் போட்டி விதிமுறைகளில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதால் விசேட பொதுச்சபை கூட்டமொன்றை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, விசேட பொதுச்சபை கூட்டத்தை அதற்கான அனுமதி கிடைக்கும் வரை உள்ளூர் முதல் தரப் போட்டிகளை காலவரையரையின்றி ஒத்திவைப்பதாக போட்டி ஏற்பாட்டுக் குழு இன்று (10) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

14 அணிகள் பங்குகொண்ட இம்முறை பருவகாலத்துக்கான முதல் தர கிரிக்கெட் தொடரானது Tier A மற்றும் Tier B என இரு குழுக்களாக நடைபெற்றன.

ஒவ்வொரு அணிகளும் லீக் சுற்றில் தலா 6 போட்டிகளில் விளையாடியிருந்தது. இதில் கொழும்பு கிரிக்கெட் கழகமும், NCC கழகமும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றயீட்டி முதலிடங்களைப் பெற்றுக்கொண்டதுடன், புள்ளிகள் பட்டியலில் கடைசி 6 இடங்களைப் பெற்றுக்கொண்ட அணிகள் கேடயத்துக்கான பிரிவில் போட்டியிடும். 

முள்னதாக லீக் சுற்று ஆட்டங்கள் நான்கு நாட்கள் கொண்டதாக நடைபெற்றன. எனினும், கொரோனா வைரஸ் காரணமாக சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளை மூன்று நாட்கள் கொண்டதாக நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

நீண்ட இடைவேளையின் பின் ஆரம்பமான சர்வதேச கிரிக்கெட்

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் மீண்டும்

அத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன் போட்டித் தொடரை நிறைவுசெய்ய வேண்டும் என்பதால், சுப்பர் 8 சுற்று ஆட்டங்களை வார நாட்களிலும் நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க