பிஃபா சிறந்த வீரர் விருதை வென்றார் மொட்ரிக்

187
Image Courtesy - Getty image

கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸியின் ஒரு தசாப்த கால ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி குரோஷியாவின் லூகா மொட்ரிக் சர்வதேச கால்பந்து சம்மேனத்தின் (பிஃபா) சிறந்த வீரருக்கான விருதை வென்றார்.

ஐரோப்பிய விருதுகள் அனைத்தையும் தட்டிச் சென்ற ரியல் மெட்ரிட் வீரர்கள்

லிவர்பூல் அணியை 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்

லண்டனில், திங்கட்கிழமை (24) நடைபெற்ற பிஃபா விருது வழங்கும் நிகழ்வில் ரொனால்டோ மற்றும் லிவர்பூலின் எகிப்து முன்கள வீரர் மொஹமட் சலாஹ்வை பின்தள்ளியே மொட்ரிக் இந்த விருதை வென்றார்.

ரியல் மெட்ரிட் மற்றும் குரோஷிய அணியின் மத்தியகள வீரரான மொட்ரிக் தனது கழகம் மற்றும் நாட்டின் வெற்றிகளுக்கு பங்களித்துள்ளார். ரியெல் மெட்ரிட் அணி இந்த ஆண்டு தொடர்ச்சியாக மூன்றாவது முறை சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றதோடு, குரோஷிய அணி முதல் முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டிவரை முன்னேறியது. இவற்றுக்கு மொட்ரிக்கின் பங்களிப்பு மிகவும் துணை புரிந்தது.

மொட்ரிக் இந்த விருதை வென்றதன் மூலம் பிஃபா விருதை அதிகமுறை வென்ற வீரர்களாக மெஸ்ஸியுடன் ரொனால்டோ தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இருவரும் தலா ஐந்து முறை இந்த விருதை வென்றுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த இரு வீரர்களுமே ஆண்டின் சிறந்த வீரர் விருதை மாறி மாறி வென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ தவிர இதற்கு முன்னர் கடைசியாக இந்த விருதை 2007ஆம் ஆண்டு பிரேசிலின் ககா வென்றிருந்தார்.

உலகக் கிண்ண காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் டென்மார்க் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக இரண்டு கோல்கள் மற்றும் ஒரு பெனால்டி ஷூட்டில் வெற்றிகளை தேடித்தந்த 33 வயதுடைய மொட்ரிக் உலகக் கிண்ணத்தின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதையும் வென்றிருந்தார்.

சிவப்பு அட்டை பெற்று கண்ணீரோடு வெளியேறிய ரொனால்டோ

ஜுவண்டஸ் அணிக்காக தனது முதல் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் போட்டியில் ஆடிய

‘எனக்கு நம்ப முடியாத பருவமாக இது இருந்தது. எனது வாழ்வில் மிகச்சிறந்த பருவமிது’ என்று விருதை வென்ற பின் மொட்ரிக் குறிப்பிட்டார்.  

இம்முறை பிஃபா விருதுக்கான இறுதிப் பட்டியலில் மெஸ்ஸி இடம்பெறாதது கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக இருந்தது. மூன்று வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலில் லிவர்பூல் அணிக்காக தனது கன்னிப் பருவத்திலேயே 44 கோல்களை பெற்ற சலாஹ் இடம்பெற்றார்.

சலாஹ்வின் அபார ஆட்டத்தால் லிவர்பூல் அணி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிவரை முன்னேறியபோதும் அவரது தோள்பட்டை காயம் ரியல் மெட்ரிட்டிடம் கிண்ணத்தை பறிகொடுக்க முக்கிய காரணியாக இருந்தது. அதேபோன்று, உலகக் கிண்ணத்திலும் அவரது எகிப்து அணி மோசமான தோல்விகளுடன் வெளியேற வேண்டி ஏற்பட்டது.   

எனினும், பிஃபா விருது வழங்கும் விழாவில் சலாஹ் வெறுங்கையோடு செல்லவில்லை. அவர் சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருதை கைப்பற்றினார். கடந்த டிசம்பரில் எவர்டனுக்கு எதிரான போட்டியில் சலாஹ் பெற்ற கோல் சிறந்த கோலாக தெரிவானது.

மொட்ரிக், ரியல் மெட்ரிட்டின் சக வீரர் செர்ஸியோ ராமோஸுடன் ஆண்டின் பிஃபா உலக அணியிலும் இடம்பிடித்தார். இந்த அணியில் டேவிட் டி கீ, டானி அல்வேஸ், ந்கோலோ கன்ட், ஈடன் ஹஸார்ட், கைலியன் ம்பாப்பே, மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  

உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டிஸ்சம்ப்ஸ் ஆண்டின் சிறந்த பயிற்சியாளர் விருதை தட்டிச் சென்றார். ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் உலகக் கிண்ணம் வென்ற மூன்றாமவர் டிஸ்சம்ப்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்கி ஸ்ராரை வீழ்த்தி FA கிண்ண அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது சென் நீக்கிலஸ்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த பருவகாலத்திற்கான

இதன்போது பிரான்ஸ் அணியின் தனது முன்னாள் சக வீரரான சினடின் சிடேனை பின்தள்ளியே டிஸ்சம்ப்ஸ் இந்த விருதை வென்றார். ரியெல் மெட்ரிட் பயிற்சியாளராக இருந்த சிடேன் அந்த அணி தொடர்ந்து மூன்றாவது முறை சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற பின் கடந்த ஜூனில் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

பெல்ஜியம் அணி உலகக் கிண்ண அரையிறுதி வரை முன்னேற உதவிய திபவுட் கோர்டொயிஸ் ஆண்டின் சிறந்த கோல்காப்பாளர் விருதை வென்றார். செல்சி அணிக்காக எப்.ஏ. கிண்ணத்தை வென்ற அவர் இந்த பருவத்தில் ரியல் மெட்ரிட் அணிக்குச் சென்றார்.

பிரேசிலின் மார்டா ஆறாவது தடவையாகவும் ஆண்டின் சிறந்த பெண் கால்பந்து வீராங்கனையாக தெரிவானார். கோபா அமெரிக்கா கிண்ணத்தை வெல்ல உதவிய அவர் லியோன் டூ அடா ஹகர்பேர் மற்றும் செனிபர் மரோஸ்ஸான் ஆகியோரை பின்தள்ளியே விருதை வென்றார்.   

மகளிர் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கை வென்ற பிரான்ஸின் லியோன் கழக முகாமையாளர் ரெய்னால்ட் பெட்ரோ, சிறந்த பெண் பயிற்சியாளர் விருதை கைப்பற்றினார்.  

பெரு நாட்டு கால்பந்து ரசிகர்கள் சிறந்த கால்பந்து ரசிகர்களுக்கான பிஃபா விருதை வென்றுள்ளனர். 1982 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற பெரு அணிக்கு ஆதரவாக ஆந்நாட்டின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரஷ்யா சென்று அணியை உற்சாகப்படுத்தினர்.  

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க