Home Tamil நொக்-அவுட் சுற்றில் இருந்து கோல் கிளேடியேட்டர்ஸ் அணி வெளியேற்றம்

நொக்-அவுட் சுற்றில் இருந்து கோல் கிளேடியேட்டர்ஸ் அணி வெளியேற்றம்

138

இந்தப் பருவகாலத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

WATCH – தமிழ்பேசும் வீரர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றதா? கூறும் விதுசன்

இந்த வெற்றியுடன் கொழும்பு ஸ்டார்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கான ஏனைய அணியினை தெரிவு செய்வதற்கான ”கொலிபையர் – 2” போட்டியில் ஆடும் வாய்ப்பினைப் பெற, கோல் கிளேடியேட்டர்ஸ் இறுதிப் போட்டிக்கு முதன் முறையாக தெரிவாகாமல் LPL தொடரில் இருந்து வெளியேறுகின்றது.

தீர்மானம் கொண்ட கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் இடையிலான போட்டி நேற்று (21) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான கொழும்பு ஸ்டார்ஸ் வீரர்கள் கோல் கிளேடியேட்டர்ஸை முதலில் துடுப்பாடப் பணித்திருந்தனர். அதேநேரம் இப்போட்டி மழைச் சிக்கல்கள் காரணமாக அணிக்கு 18 ஓவர்களாகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

LPL தொடருடன் இணையும் வசீம் அக்ரம்

தொடர்ந்து முதலில் துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு சிறந்த ஆரம்பம் ஒன்று அமையவில்லை. அணியின் ஆரம்ப வீரர்களாக வந்த அணித்தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் அசாத் சபீக் ஆகிய இருவரும் வெறும் 04 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். அத்துடன் மூன்றாம் இலக்கத்தில் ஆடிய லஹிரு உதாரவும் 06 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

பின்னர் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு சஹான் ஆராச்சிகே தவிர்ந்த ஏனைய மத்திய வரிசை துடுப்பாட்டவீரர்கள் எவரும் கைகொடுக்காத நிலையில் அவ்வணி 18 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

கோல் கிளேடிடே்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சஹான் ஆராச்சிகே 31 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்கள் பெற்றிருக்க, கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில் பென்னி ஹொவல் 3 விக்கெட்டுக்களையும் மொஹமட் நபி, கசுன் ராஜித ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 110 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி தொடக்கத்தில் சற்று தடுமாற்றம் காட்டிய போதும் ரவி பொபராவின் துடுப்பாட்டத்தோடு வெற்றி இலக்கினை 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 109 ஓட்டங்களை எடுத்தது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்த்தில் ரவி பொபரா இறுதிவரை ஆட்டமிழக்காது 28 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் அஞ்செலோ மெதிவ்ஸ் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார்.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் இமாத் வஸீம் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகன் விருது ரவி பொபராவிற்கு வழங்கப்பட்டிருந்தது.  அதேவேளை இப்போட்டியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் ஏனைய அணியினை தீர்மானிக்கும் ”கொலிபையர் 2” மோதலில் இன்று (22) கண்டி பல்கொன்ஸ் அணியினை எதிர்கொள்ளவிருக்கின்றது.

ஸ்கோர் விபரம்

Result


Colombo Stars
109/3 (16.5)

Galle Gladiators
108/9 (18)

Batsmen R B 4s 6s SR
Asad Shafiq c Angelo Mathews b Kasun Rajitha 4 7 0 0 57.14
Kusal Mendis c Ravindu Fernando b Mohammad Nabi 4 14 0 0 28.57
Lahiru Udara c Suranga Lakmal b Dominic Drakes 6 13 0 0 46.15
Sahan Arachchige c Charith Asalanka b Benny Howell 53 31 3 3 170.97
Nuwanidu Fernando c Charith Asalanka b Mohammad Nabi 8 10 0 0 80.00
Iftikhar Ahmed c Mohammad Nabi b Suranga Lakmal 5 10 0 0 50.00
Imad Wasim c Charith Asalanka b Benny Howell 17 15 2 0 113.33
Wahab Riaz b Benny Howell 2 4 0 0 50.00
Lakshan Sandakan b Kasun Rajitha 1 3 0 0 33.33
Nuwan Pradeep not out 0 1 0 0 0.00
Nuwan Thushara not out 2 1 0 0 200.00


Extras 6 (b 0 , lb 1 , nb 1, w 4, pen 0)
Total 108/9 (18 Overs, RR: 6)
Bowling O M R W Econ
Kasun Rajitha 4 1 9 2 2.25
Suranga Lakmal 4 0 27 1 6.75
Mohammad Nabi 4 0 20 2 5.00
Dominic Drakes 3 0 21 1 7.00
Jeffrey Vandersay 1 0 13 0 13.00
Niroshan Dickwella 2 0 0 3 0.00


Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Lakshan Sandakan b Imad Wasim 13 27 2 0 48.15
Dinesh Chandimal c Nuwanidu Fernando b Nuwan Pradeep 13 8 1 1 162.50
Charith Asalanka run out (Nuwanidu Fernando) 10 14 1 0 71.43
Ravi Bopara not out 43 28 6 0 153.57
Angelo Mathews not out 20 25 2 0 80.00


Extras 10 (b 2 , lb 1 , nb 1, w 6, pen 0)
Total 109/3 (16.5 Overs, RR: 6.48)
Bowling O M R W Econ
Nuwan Pradeep 3 0 21 1 7.00
Nuwan Thushara 3 0 23 0 7.67
Wahab Riaz 3.5 0 26 0 7.43
Imad Wasim 4 0 18 1 4.50
Lakshan Sandakan 3 0 18 0 6.00



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<