Home Tamil திக்வெல்ல மற்றும் பந்துவீச்சாளர்களின் பிரகாசிப்புடன் கொழும்புக்கு முதல் வெற்றி

திக்வெல்ல மற்றும் பந்துவீச்சாளர்களின் பிரகாசிப்புடன் கொழும்புக்கு முதல் வெற்றி

Lanka Premier League 2022

141

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று (08) நடைபெற்ற தம்புள்ள ஓரா அணிக்கு எதிரான 5ஆவது லீக் போட்டியில், நிரோஷன் திக்வெல்லவின் அரைச் சதம் மற்றும் வேகப் பந்துவீச்சாளர்களின் பங்களிப்புடன் 9 ஓட்டங்களால் கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதன்மூலம், இம்முறை லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்து புள்ளப்பட்டியலில் 3ஆவது இடத்தைப் பிடிக்க, தம்புள்ள ஓரா அணி தொடர்ச்சியாக 2ஆவது தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றுக் கொண்டது.

சூரியவெவ மைதானத்தைச் சுற்றிலும் குளிர்ந்த காலநிலை மற்றும் வேகமான காற்று காணப்பட்ட நிலையில், போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

தம்புள்ளை ஓரா அணியைப் பொறுத்தமட்டில் வேன் மீகரென் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோருக்குப் பதிலாக டொம் அபேல் மற்றும் தரிந்து ரத்நாயக ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட, கொழும்பு ஸ்டார்ஸ் அணியில் முதல் போட்டியில் ஆடிய சிக்குகே பிரசன்ன, பென்னி ஹவேல், கீமோ போல் மற்றும் முதித லக்ஷான் ஆகியோருக்குப் பதிலாக கரீம் ஜனாத், நவோத் பரணவிதான, நவீன் உல் ஹக் மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோருடன் களமிறங்கியிருந்தது.

நாணய சுழற்சிக்கு அமைய முதலில் களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஞ்சலோ மெதிவ்ஸ் 4 ஓட்டங்களுடனும், அடுத்த வந்த நவோத் பரணவிதான ஓட்டமின்றியும் லஹிரு குமார வீசிய முதல் ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியனர்.

தொடர்ந்து புதிய வீரராக மைதானம் வந்த சரித் அசலங்கவும் வெறும் 06 ஓட்டங்களை எடுத்த நிலையில் லஹிரு குமாரவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, நிரோஷன் திக்வெல்ல – ரவி பொபாரா ஜோடி பொறுப்பான முறையில் துடுப்பாடி 54 ஓட்டங்களை நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாகப் பகிர்ந்தது. எனினும், 26 ஓட்டங்களை எடுத்த நிலையில் ரவி பொபாரா துரதிஷ்டவசமாக ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

கொழும்பு அணிக்காக சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடிய நிரோஷன் திக்வெல்ல, T20i போட்டிகளில் தன்னுடைய 10ஆவது அரைச் சதத்தைப் பெற்று 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து மத்திய வரிசையில் களமிறங்கிய தினேஷ் சந்திமால் மற்றும் டொமினிக் ட்ராக்ஸ் ஆகிய இருவரும் சிறு ஆறுதல் வழங்க கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை எடுத்தது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக தனியொருவராக அதிரடி காண்பித்த நிரோஷன் திக்வெல்ல, 41 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்கள் பெற, தினேஷ் சந்திமால் ஒரு சிக்ஸர் மற்றும் பௌண்டரிகள் அடங்கலாக 23 பந்துகளில் 29 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தம்புள்ள ஓரா அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், சிகந்தர் ராசா, தரிந்து ரத்நாயக மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 166 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ள ஓரா அணிக்கு ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய ஜோர்டன் கொக்ஸ் மற்றும் ஷெவோன் டேனியல் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தினை வழங்கியிருந்தனர்.

கொழும்பு ஸ்டார்ஸ் அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய தம்புள்ள ஓரா அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ஓட்டங்களைக் கடந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

எனினும், கொழும்பு அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ், தன்னுடைய வேகப் பந்துவீச்சாளர்களை சிறப்பாக கையாள ஆரம்பித்தார். அதன்படி, சுரங்க லக்மால், டொமினிக் ட்ராக்ஸ், கரீம் ஜனத் ஆகியோர் மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி, முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இதன்காரணமாக தம்புள்ள ஓரா அணிக்கு 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

தம்புள்ள ஓரா அணிக்காக சிறந்த ஆரம்பத்தைக் கொடுத்த ஜோர்டன் கொக்ஸ் 28 ஓட்டங்களையும், ஷெவோன் டேனியல் 29 ஓட்டங்களையும், டொம் அபேல் 33 ஓட்டங்களையும், அணித்தலைவர் தசுன் ஷானக 31 ஓட்டங்னளையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். இவர்களை தவிர்த்து 6 வீரரகள் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை.

கொழும்பு ஸ்டார்ஸ் அணி சார்பாக பந்துவீச்சில் சுரங்க லக்மால், டொமினிக் ட்ராக்ஸ், கரீம் ஜனத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், நவீன் உல் ஹக் ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.

இறுதியில் 9 ஓட்டங்களால் வெற்றியீட்டிய கொழும்பு ஸ்டாரஸ் அணி LPL தொடரில் தமது முதல் வெற்றியினைப் பதிவு செய்ய, தம்புள்ள ஓரா அணி இரண்டாவது தொடர் தோல்வியினை சந்தித்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் நிரோஷன் திக்வெல்ல தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

நாளைய தினம் (09) போட்டியின் ஓய்வு நாளாக அமையவுள்ளதுடன், நாளை மறுதினம் (10) சனிக்கிழமை கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள 6ஆவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள கண்டி பல்கொன்ஸ் அணி, இரண்டாவது இடத்தில் உள்ள ஜப்னா கிங்ஸை சந்திக்கவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

Result


Dambulla Aura
156/7 (20)

Colombo Stars
165/8 (20)

Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c Lahiru Madushanka b Tharindu Rathnayake 62 41 8 2 151.22
Angelo Mathews c Sikandar Raza b Lahiru Kumara 4 3 1 0 133.33
Nawod Paranavithana lbw b Lahiru Kumara 0 1 0 0 0.00
Charith Asalanka c Chathuranga de Silva b Lahiru Kumara 6 6 0 1 100.00
Ravi Bopara run out (Jordan Cox) 26 25 2 1 104.00
Dinesh Chandimal not out 29 23 2 1 126.09
Karim Sadiq b Sikandar Raza 2 4 0 0 50.00
Dominic Drakes c Jordan Cox b Lahiru Kumara 18 12 2 1 150.00
Suranga Lakmal c Chathuranga de Silva b Lahiru Madushanka 6 3 0 1 200.00
Jeffrey Vandersay not out 5 2 1 0 250.00


Extras 7 (b 0 , lb 1 , nb 0, w 6, pen 0)
Total 165/8 (20 Overs, RR: 8.25)
Bowling O M R W Econ
Lahiru Kumara 4 0 36 4 9.00
Sikandar Raza 4 0 31 1 7.75
Tharindu Rathnayake 3 0 20 1 6.67
Lahiru Madushanka 2 0 17 1 8.50
Dasun Shanaka 2 0 20 0 10.00
Noor Ahmad  3 0 23 0 7.67
Chathuranga de Silva 2 0 17 0 8.50


Batsmen R B 4s 6s SR
Shevon Daniel c Karim Janat b Dominic Drakes 28 27 4 0 103.70
Jordan Cox c Dominic Drakes b Suranga Lakmal 29 15 6 0 193.33
Bhanuka Rajapaksha c Nawod Paranavithana b Karim Janat 17 14 2 0 121.43
Tom Abell c Jeffrey Vandersay b Suranga Lakmal 33 22 5 0 150.00
Dasun Shanaka not out 31 20 2 2 155.00
Sikandar Raza c Niroshan Dickwella b Karim Janat 0 3 0 0 0.00
Lahiru Madushanka c Niroshan Dickwella b Naveen Ul Haq 4 4 0 0 100.00
Chathuranga de Silva b Dominic Drakes 4 5 0 0 80.00
Tharindu Rathnayake not out 8 10 1 0 80.00


Extras 2 (b 0 , lb 1 , nb 0, w 1, pen 0)
Total 156/7 (20 Overs, RR: 7.8)
Bowling O M R W Econ
Angelo Mathews 1 0 10 0 10.00
Suranga Lakmal 4 0 29 2 7.25
Dominic Drakes 4 0 35 2 8.75
Naveen Ul Haq 4 0 22 1 5.50
Charith Asalanka 1 0 3 0 3.00
Jeffrey Vandersay 2 0 19 0 9.50
Ravi Bopara 1 0 7 0 7.00
Karim Janat 3 0 30 2 10.00



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<