அமெரிக்கா அணிக்காக விளையாடத் தயாராகும் இங்கிலாந்து வீரர்

718

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால் அமெரிக்க அணிக்கு விளையாடத் தயாராக இருப்பதாக இங்கிலாந்து அணிக்காக உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் லியாம் பிளங்கெட் தெரிவித்துள்ளார். 

35 வயதான லியாம் பிளெங்கெட் தனது உயரம் மற்றும் ஸ்விங்கினால் பல துடுப்பாட்ட வீரர்களை திணறடித்துள்ளதோடு பின்வரிசையில் களமிறங்கி துடுப்பாட்டத்திலும் அதிரடி காட்டுகின்ற ஒரு வீரராக உள்ளார்

இங்கிலாந்து அணிக்காக இதுவரை 13 டெஸ்ட், 89 ஒருநாள் மற்றும் 22 T20 போட்டிகளில் விளையாடியுள்ள லியாம் பிளங்கெட், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணியிலும் இடம்பெற்றார். குறிப்பாக, 2019 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் வருடாந்த ஒப்பந்தப் பட்டியலில் பிளங்கெட் பெயர் இடம்பெறவில்லை. அதேபோல, கொரோனா வைரஸுக்குப் பிறகு நடைபெற்ற தொடர்களுக்காக பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்ட 55 உத்தேச இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியலிலும் இவர் இடம்பெறவில்லை

இதனிடையே, லியாம் பிளங்கெட் மனைவி அமெரிக்காவைச் சேர்ந்தவர். எனவே, இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் அமெரிக்க அணிக்கு விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் லியாம் பிளாங்கெட் பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கையில், உலகின் சிறந்த ஒருநாள் அணிக்காக விளையாட விருப்பப்படுகிறேன்.

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலையில

இன்னும் என்னால் இங்கிலாந்துக்காக விளையாட முடியும். உலகக் கிண்ணத்துக்குப் பிறகு பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை. இங்கிலாந்து அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்

மறுபுறத்தில் அமெரிக்கா கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். நல்ல உடற்தகுதியில் இருந்தும் எனக்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால் நான் ஏன் அமெரிக்க அணியை தேர்வு செய்யக்கூடாது?” என்றார்

மேலும் பேசிய அவர், என் குழந்தைகள் அமெரிக்கர்களாக இருப்பதால் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளேன் எனச் சொல்வதற்கு நன்றாக இருக்கும்

நான் அங்கு சென்று, அமெரிக்கக் குடிமகனாகி அல்லது கிரீன் கார்ட் பெற்று, அமெரிக்க கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவ முடியும்” என அவர் தெரிவித்தார்.  

முன்னதாக அவுஸ்திரேலியாவின் ஷெபீல்ட் ஷீல்ட் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வேகப் பந்துவீச்சாளர் கெமரூன் கெனன், தனது தாயின் உறவு மூலமாக கடந்த வருடம் அமெரிக்கா கிரிக்கெட் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த வருடம் .சி.சியின் ஒருநாள் அந்தஸ்த்தைப் பெற்றுக்கொண்ட அமெரிக்கா கிரிக்கெட் அணிக்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரரான சேவியர் மார்ஷல், ஹேம்ஷையார் கழகத்தின் சகலதுறை வீரர் இயென் ஹொலன்ட் மற்றும் முன்னாள் தென்னாபிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ருஸ்டி தெரொன் ஆகியோர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<