Gaming இல் சாதிக்க உங்களுக்கு சில வழிகள்

Vision Care தரும் Sports Vision மூலம் உங்கள் திறனை உயர்த்துங்கள் - பாகம் 1 Gaming

156

கடந்த காலங்களில் விளையாட்டுக் கலாச்சாரத்தின் சிறு பிரிவாக இருந்த இலத்திரனியல் விளையாட்டுத்துறை (Gaming), இன்று தனக்கென ஒரு தனி இடத்தினைப் பிடித்து வளர்ச்சியடைந்துவருகின்றது.  

Statista வெளியிட்டிருக்கும் அறிக்கையின் அடிப்படையில், 2023ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் உலகில் 3 பில்லியன் வரையிலான மக்கள் இலத்திரனியல் விளையாட்டில் ஈடுபடுபவர்களாக (Gamers) இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அது 50%ஐ விட அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது. 

இலங்கையினைப் பொறுத்தவரையில், இலத்திரனியல் விளையாட்டுக்கள் கடந்த தசாப்தத்தில் அதி துரித வளர்ச்சியினைக் கண்டிருப்பதோடு, குறிப்பாக கைத்தொலைபேசி வழியிலான இலத்திரனியல் விளையாட்டு அதிக வளர்ச்சியினைக் கண்டிருக்கின்றது. 

Gamer.lk இன் நிறைவேற்று அதிகாரியான ரவீன் விஜயதிலக்க, இலங்கையில் கிட்டத்திட்ட 3 மில்லியன் பேர் இலத்திரனியல் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். இது இலங்கையின் சனத்தொகையில் கிட்டத்தட்ட 14% வீதமாக பார்க்கப்படுகின்றது. 

மறுமுனையில், கொவிட்-19 வைரஸ் அனைவரினையும் வீடுகளுக்குள்ளேயே இருக்க வைத்ததன் காரணமாக, இந்த இலத்திரனியல் விளையாட்டுத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக அபரிமிதமாக வளர்ச்சியடைந்திருக்கின்றது. 

game.lk

இதேநேரம், இலத்திரனியல் விளையாட்டில் ஈடுபடுவர்கள் எவ்வகையான போட்டித் தன்மையினை எதிர்கொள்ளும் போதும் அவர்கள் தங்களது ஆற்றல்களை அதிகரித்துக் கொள்ள வேண்டிய தேவையொன்று காணப்படுகின்றது. 

எனவே, இவ்வாறு இலத்திரனியல் விளையாட்டில் தங்களது ஆற்றல்களை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு Vision Care நிறுவனத்தின் Sports Vision தொழில்நுட்பம் உதவுவதற்கு தயாராக காணப்படுகின்றது. விளையாட்டு வீர வீராங்கனைகளின் பார்வைத்திறனை அதிகரிப்பதில் முன்னணியில் திகழும் Sports Vision தொழில்நுட்பம், இலத்திரனியல் விளையாட்டிலும் தடம் பதிப்பதற்கு காத்திருக்கின்றது.  

Sports Vision இல் பயன்படும் பயிற்சி முறைகள்

Sports Vision தொழில்நுட்பத்தில், இலத்திரனியல் விளையாட்டுடன் சம்பந்தப்பட்ட பின்வரும் பார்வை ஆற்றல்கள் விருத்தி செய்யப்படுகின்றன. 

  1. Reaction Time – கிடைக்கப்பெறும் தூண்டலுக்கும், அதற்கு வழங்கவுள்ள துலங்கலுக்கும் இடையிலான நேரம்

இலத்திரனியல் விளையாட்டுக்கள் உண்மையிலேயே, துரித காலப்பகுதிக்குள் நடைபெறுபவையாக அமைகின்றன. எப்படியான ஒரு போட்டித்தன்மை இருந்த போதும் இலத்திரனியல் விளையாட்டில் ஈடுபடும் போது உங்களது வேகம், உங்களது முடிவினைத் தீர்மானிப்பதில் முக்கியமானதாக காணப்படுகின்றது.  

இதேநேரம், ஈ-ஸ்போர்ட் (E-Sport) போன்ற இடங்களிலும் நீங்கள் தூண்டல் ஒன்றுக்கு துலங்கலை வழங்கும் நேரம் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. எனவே, நீங்கள் எவ்வகையான இலத்திரனியல் சாதனத்தில் இலத்திரனியல் விளையாட்டில் ஈடுபட்ட போதும் உங்களது, தூண்டல் – துலங்கல் நேரத்தினை குறைத்து வேகமாக செயற்பட வேண்டியது அவசியமாக காணப்படுகின்றது. 

  1. Eye-Hand Coordination – கைகளையும் – கண்களையும் ஒருங்கிணைவு செய்யும் ஆற்றல் 

மேலே குறிப்பிட்டது போன்று இலத்திரனியல் விளையாட்டுக்களின் போது விருத்தி செய்ய வேண்டிய மற்றுமொரு ஆற்றல்களில் ஒன்றாக கண்கள்  – கைகள் இடையிலான ஒருங்கிணைவு காணப்படுகின்றது. 

மிகவும் வேகமாக நடைபெறும் இலத்திரனியல் விளையாட்டுக்களில் கண்கள் பெறுகின்ற தூண்டல்களுக்கு அமைய, விரைவாக கைகள் துலங்கல்களை வழங்குவது, ஒருவரின் இலத்திரனியல் விளையாட்டுத்திறமையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகும். 

  1. Multiple Object Tracking – ஒரே நேரத்தில் பல்வற்றை அவதானிக்கும் திறன். 

நீங்கள் Call of Duty அல்லது League of Legends போன்ற இலத்திரனியல் விளையாட்டுக்களை விளையாடும் போது ஒரே நேரத்தில் பல்வேறு விடயங்களை அவதானிக்க வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்திருப்பீர்கள். எனவே, இவ்வாறான இலத்திரனியல் விளையாட்டுக்களின் போது பல்வேறு பொருட்களை ஒரே நேரத்தில் அவதானிக்கும் ஆற்றலினை அதிகரிப்பது அதிக நன்மை தரும் விடயங்களில் ஒன்றாக மாறும்.    

  1. Go/No Go – அழுத்தமான தருணங்களில் தூண்டல்களுக்கு சரியான முடிவினை எடுப்பது 

உண்மையில் வேகம் மாத்திரம் இலத்திரனியல் விளையாட்டுக்களுக்கு போதுமான ஆற்றலாக இருப்பதில்லை. சரியான முடிவினை அழுத்தமான தருணங்களில் விரைவாக எடுப்பதும் முக்கியமாக இருக்கின்றது. நீங்கள் இவ்வாறான ஒரு நிலைமையினை அழுத்தமான சந்தர்ப்பங்களில் FIFA அல்லது NBA2k போன்ற இலத்திரனியல் விளையாட்டுக்களை விளையாடி முடிவுகளை எடுக்கும் போது அவதானிக்க முடியுமாக இருக்கும். 

Gamerlive

எனவே, இலத்திரனியல் விளையாட்டுக்களின் போது இந்த விடயத்தில் முடிவெடுக்கும் உங்களது ஆற்றலானது Go/No Go இல் (அழுத்தமான தருணங்களில் தூண்டல்களுக்கு சரியான முடிவினை எடுப்பதில்)) தங்கியிருக்கின்றது. 

  1. Perception Span – சந்தர்ப்பத்திற்கு மிகவும் தேவையாக இருக்கும் தகவல் பெறும் ஆற்றல்.

நீங்கள் இலத்திரனியல் விளையாட்டில் ஈடுபடும் போது உங்களை சுற்றி மிகவும் சிக்கலான ஒரு நிலைமை காணப்படும். எனவே, இவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றில் உங்களுக்கு தேவையாக இருக்கும் விடயத்தினை தெரிவு செய்து அதிலிருந்து தீர்மானம் எடுப்பது உங்கள் வெற்றிக்கு மிக முக்கியமானதாக இருக்கும். 

எப்படி Sports Vision தொழில்நுட்பம் இலத்திரனியல் விளையாட்டு வீரர்களின் திறன்களை அதிகரிக்கும்??

இலத்திரனியல் விளையாட்டில் ஈடுபடும் ஒருவர் பற்றி மேற்குறிப்பிட்ட ஆற்றல்களினை வைத்து முதலில் மதிப்பீடுகள் செய்யப்படும். பின்னர், அவர்களுக்கு பொருத்தமான பயிற்சியாளர் ஒருவரின் துணையுடன் மேற்குறித்த ஆற்றல்களை பகுப்பாய்வு செய்து, பயிற்சிகள் வழங்கப்படும். 

இலத்திரனியல் விளையாட்டுடன் தொடர்புபட்ட திறன்களை அதிகரிக்கும் ஆசையுள்ள நீங்கள் Vision Care நிறுவனத்தின் Sports Vision தொழில்நுட்பத்துடன்  இணைய ஒரு தொழில்முறை விளையாட்டு வீரராக இருக்க வேண்டியது அவசியமில்லை என்பது உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாக இருக்கின்றது.   

Sports Vision தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமா? +94 76 697 628 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள் அல்லது கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். உங்களுடன் Vision Care நிறுவனத்தின் Sports Vision பிரிவு தொடர்பை ஏற்படுத்தும்.