உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் அசத்தும் ஹஷான் திலகரத்னவின் மகன் துவிந்து

104

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஒட்டுமொத்த உலகம் இதை எதிர்த்து போராடிக் கொண்டிருகின்றது. இலங்கையில் 229 பேர் கண்கானிக்கப்பட்டு வருவதுடன், 100க்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸ் தொற்றினால்  பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.  

இதன்காரணமாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியவசிய தேவைகளைத் தவிர வேறு எந்த தேவைகளுக்கும் மக்களுக்கு வெளியே செல்ல முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலால் கிரிக்கெட் மாத்திரமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு தொடர்கள் இரத்து செய்யப்பட்டன. இதனால் சகல விளையாட்டு வீரர்களும் வீடுகளுக்குள் முடங்கினர்

இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் இரத்து

கொரோனா வைரஸ் பீதியானது உலகினை அச்சுறுத்தி வரும் நிலையில், அது கிரிக்கெட் விளையாட்டினையும் தொடர்ந்து பாதித்து வருகின்றது. அந்தவகையில், ……….

இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் நடைபெறவிருந்த சகலவிதமான போட்டித் தொடர்களும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டன

இதில் முக்கியமாக, இலங்கைஇங்கிலாந்து அணிகள் இடையில் .சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இடம்பெறவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் இடைநிறுத்தப்பட்டது.

அத்துடன், மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துக்கும், எசெக்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கும் இடையில் இலங்கையில் நடைபெறவிருந்த நான்கு நாட்கள் கொண்ட சம்பிரதாய முதல்தர கிரிக்கெட் போட்டியும் இரத்து செய்யப்பட்டது

கொரோனாவினால் இலங்கையின் விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட மாற்றம்

சீனாவில் உருவாகி, இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகின்……………

அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட முதல்தர கழகங்களுக்கிடையிலான 3 நாட்கள் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது

எனினும், இம்முறை பருவகாலத்துக்கான இந்த தொடரின் முதல் சுற்றுக்கான அனைத்து ஆட்டங்களும் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், சுப்பர் 8 சுற்றுக்கான ஆட்டங்கள் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

இதன்படி, கழகங்களுக்கான பிரிவின் கீழ் மற்றும் பி குழுக்கலுக்காக நடத்தப்பட்ட போட்டியின் முதல் சுற்று முடிவில் கொழும்பு கிரிக்கெட் கழகம், சிலாபம் மேரியன்ஸ் கழகம் என்பன புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டன

குழுவில் கொழும்பு கிரிக்கெட் கழக அணி, 6 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி, 2இல் சமநிலை அடைந்து 97.5 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக அணி, 6 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றி, 2இல் தோல்வி, 2இல் சமநிலை அடைந்து 69.75 புள்ளிகளைப் பெற்று அந்தப் குழுவில் இரண்டாவது இடத்தையும், இலங்கை இராணுவ அணி 6 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றி, 2இல் தோல்வி, 2இல் சமநிலை அடைந்து 61.14 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும், தற்போது மிகப் பெரிய ஆபத்தாக மாறியிருக்கும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு ………

இதன் பி குழுவில் 3 வெற்றி, 2 தோல்வி, ஒரு சமநிலை என 65.71 புள்ளிகளைப்  பெற்று சிலாபம் மேரியன்ஸ் அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.  

அந்த குழுவில் என்.சி.சி மற்றும் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் என்பன முறையே 2ஆவது, 3ஆவது இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளன.

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பிரபல என்.சி.சி கழகம் 5 போட்டிகளில் விளையாடி ஒரேயொரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

ThePapare.com வினா விடை – இலங்கை கிரிக்கெட்டின் துடுப்பாட்டம்

விளையாட்டு தொடர்பிலான உங்கள் அறிவை பரிசோதிப்பதற்கும்,…………

இதன்படி, இரண்டாவது சுற்றுக்கு குழுவிலிருந்து கொழும்பு கிரிக்கெட் கழகம், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம் மற்றும் பி.ஆர்.சி கழகம் ஆகிய நான்கு கழகங்களும், பி குழுவிலிருந்து என்.சி.சி, சிலாபம் மேரியன்ஸ் கழகம், செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் ராகம கிரிக்கெட் கழகம் என்பன தேர்வாகியுள்ளன.  

இந்த நிலையில், பதுரெலிய விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த லஹிரு மிலன்த, 5 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், ஒரு அரைச் சசதம் உள்ளடங்கலாக 638 ஓட்டங்களை எடுத்து கழகங்களுக்கான பிரிவின் கீழ் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்

25 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான இவர், இலங்கை , இலங்கை வளர்ந்துவரும் அணி மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் அணிகளுக்காக தொடர்ந்து விளையாடி வருகின்றார்.

இறுதியாக தமிழ் யூனியன் கழகத்துடனான போட்டியில் ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட அவர், இதுவரை 63 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள், 21 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 4483 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் என்.சி.சி கழகத்துக்காக விளையாடி வரும் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெதும் நிஸ்ஸங்க, 6 போட்டிகளில் விளையாடி 3 சதம், 3 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 628 ஓட்டங்களை எடுத்து 2ஆவது இடத்திலும், அதே கழகத்தைச் சேர்ந்த லஹிரு உதார, ஒரு சதம், 3 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 574 ஓட்டங்களை எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்

இதேநேரம், பி.ஆர்.சி கழகத்தைச் சேர்ந்த துவிது திலகரத்ன, 5 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அந்தப் பிரிவில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

23 வயதான இடதுகை சுழல் பந்துவீச்சாளரான இவர், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடியுள்ளதுடன், இதுவரை 25 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 108 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

இவர் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் ஷான் திலகரத்னவின் புதல்வர் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இவர் இறுதியாக கடந்த மாதம் கோல்ட்ஸ் கழகத்துடனான போட்டியில் 147 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவு செய்தார்

150 வருட பாடசாலை கிரிக்கெட் வரலாற்றை மாற்றிய 17 வயது வீரர்

இலங்கைக்கு 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பதற்கு ………..

இந்தப் பட்டியலில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் மலிந்த புஷ்பகுமார 5 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுக்களை எடுத்து இரண்டாவது இடத்தையும், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் பிரபாத் ஜயசுந்தர 5 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுக்களை எடுத்து மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அதேபோல, பி கழகங்களுக்கான பிரிவின் கீழ் நடத்தப்பட்ட போட்டியின் முதல் சுற்று முடிவில் பொலிஸ் விளையாட்டு கழக அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது

அந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி, 3 இல் சமநிலை அடைந்து 99.42 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது

இதில் 4 போட்டிகளில் வெற்றி, ஒரு போட்டியில் தோல்வி என 82.51 புள்ளிகளைப் பெற்று ப்ளூம்பீல்ட் கழகம் இரண்டாவது இடத்தையும், 2 வெற்றி, 2 தோல்வி, 3 சமநிலை என 81.58 புள்ளிகளைப் பெற்று கண்டி விளையாட்டுக் கழகம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது.

இதுஇவ்வாறிருக்க, பி கழகங்களுக்கான பிரிவின் கீழ் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த துலாஷ் உதயங்க முதலிடத்தில் உள்ளார். இவர் ஒரு சதம், 4 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 584 ஓட்டங்களைக் குவித்துள்ளார்

24 வயதான வலதுகை துடுப்பாட்ட வீரரான இவர், இதுவரை 27 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 11 அரைச்சதங்கள், 4 சதங்கள் உள்ளடங்கலாக 1726 ஓட்டங்களைக் குவித்துள்ளார்

இந்தப் பிரிவில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தை ப்ளூம்பீல்ட் கழகத்தைச் சேர்ந்த கயான் சிறிசோம பெற்றுக் கொண்டுள்ளார். இவர் 7 போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<