குலசேகரவுடன் இணைந்து ஓய்வுபெற விரும்பும் மாலிங்க

4184

இணைப்பு என்பது கிரிக்கெட்டில் எப்போதும் உள்ளது. ஆடுகளத்தில் துடுப்பாட்ட ஜோடி தொடக்கம், நடுவர்கள், வர்ணனையாளர்கள் இடையே நல்ல புரிதல் என்பது எப்போதும் தேவைப்படும் ஒன்று. பாராட்டுகளுக்கு உள்ளான பல ஜோடிகளை கிரிக்கெட் உலகம் பார்த்துள்ளது. அதில் மாலிங்க – குலசேகர ஜோடி அதிகமாக ஒன்றிணையாத ஜோடியாகவே இருந்திருக்கிறது. 

தனது அனுபவமே நிக்கோலஸ் பூரணை வீழ்த்த காரணம் என்கிறார் மெதிவ்ஸ்

எட்டு மாதங்களாக எந்தவொரு வலைப்….

13 மாத இடைவெளியில் பிறந்த இவர்களில் மூத்தவரான குலசேகர, மாலிங்கவுக்கு 8 மாதங்களுக்கு முன்னரே சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கினார். எவ்வாறாயினும் இவர்களின் ஆரம்பக் கட்ட கிரிக்கெட் வாழ்வில் இலங்கை வேகப்பந்து வீச்சுக்கு தலைமை வகிப்பவராக சமிந்த வாஸ் இருந்தார். எனவே இருவரும் ஒன்றாக ஆடுவதற்கு காத்திருக்க வேண்டி இருந்தது. வாஸுக்கு உதவிப் பந்துவீச்சாளர்களாக குறிப்பிட்ட காலம் இருந்த இவர்கள் வாஸ் விடைகொடுத்த பின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக வரத் தயாரானார்கள்

அவர் உண்மையிலேயே முன்னிலைபெற்றபோது தமது திறமையை வெளிப்படுத்தினார்கள். இவர்கள் மீது 2003/04 பருவம் தொடக்கம் முதலீடு செய்ய வேண்டி இருந்தது. அவர்கள் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஜோடியாக ஆடினர். ஆம் வெறும் 5 ஆண்டுகள்

கடந்த 2009 ஆம் ஆண்டு குலசேகரவின் கிரிக்கெட் வாழ்வில் திருப்புமுனையாக இருந்தது. ஒரு பதில் வீரராக இருப்பதற்கு பதில் தொடர்ச்சியாக அணியில் இடம்பெறும் வீரராக மாறினார். அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டபோது மாலிங்கவுடன் இணைந்த பலம்மிக்க ஜோடியாக மாறினார். 2011 உலகக் கிண்ணத்தில் மாலிங்க இலங்கை அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளராக மாறியிருந்தார். அடுத்த உலகக் கிண்ணம் வேகப் பந்துவீச்சாளருக்கு சாதகமான சூழலில் இடம்பெற்ற வேளையில் இந்த ஜோடி 3 போட்டிகளில் இணைந்து ஆடியதோடு பொரும்பாலான போட்டிகளில் குலசேகர இடம்பெறவில்லை. இது அவர்களின் இணைப்பை குறுகியதாக்கியது.  

அவிஷ்கவிடம் விஷேடமாக ஏதோ உள்ளது: மஹேல ஜயவர்தன

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்…

டாக்காவில் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற டி-20 உலகக் கிண்ணம் மாலிங்ககுலசேகரவின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. அப்போது அந்த இருவரும் தமது உச்சத்தில் இருந்தார். எவ்வாறாயினும் 2014 இந்த இருவரும் இலங்கைக்காக ஒன்றிணைந்து ஆடிய குறிப்பிடத்தக்க ஆண்டாக குறிப்பிடலாம். இந்த இணைப்பில் பிளவு விழுந்தது.           

கடைசியாக இவர்கள் ஒன்றிணைந்து ஆடியது 2017 ஜூலையில் ஜிம்பாப்வேயிடம் தொடர் தோல்வியை சந்தித்தபோதாகும். இப்போது 2019 ஜூலை ஆகி இருப்பதால் அது நிகழ்ந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் மாலிங்க மற்றும் குலசேகர ஒற்றைப் போட்டியிலேனும் ஒன்றிணைந்து ஆடியதில்லை. நுவன் பிரதீப் சுகவீனமுற்ற நிலையில் இலங்கை தனது இரண்டாவது வேகப் பந்துவீச்சாளர் இன்றி மற்றொரு உலகக் கிண்ணத்தில் ஆடுகிறது. உத்வேகம் கொண்ட முன்னணி வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தான் களைப்படைந்து விட்டதாகவும் தனது பழைய நண்பனுடன் விடைபெறும் போட்டி ஒன்றில் விளையாட விரும்புவதாகவும் குறிப்பிடுகிறார்.   

மாலிங்க – குலசேகர இணைந்து விளையாடிய போட்டிகள்

வாசின் கிரிக்கெட் வாழ்வு சர்ச்சைக்குரிய முறையில் முடிவடையும்போது பின்னால் இளம் வீரர்கள் தயாராக இருந்தார்கள். லசித் மாலிங் விடைபெறும் நேரத்தில் அவ்வாறான இளம் வீரர்கள் எம்மிடம் இருக்கிறதா? இளம் வீரர்கள் என்று பார்த்தால் கசுன் ராஜித்த உள்ளார். குழாத்தில் இருக்கும் ஏனைய அனைத்து வேகப் பந்துவீச்சாளர்களும்  தமது 30 வயதுகளில் இருக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு வாஸ் தனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியில் ஆடும்போது தனது 20 வயதுகளில் இருந்த மாலிங்க, குலசேகர, பர்வீஸ் மஹ்ரூப் மற்றும் தில்ஹார பெர்னாண்டோ போன்ற வீரர்கள் இப்போது எங்கே?

சனத் ஜயசூரியவுக்கு ஓர் உணர்வுபூர்வமான அழைப்பு

ஒருநாள் ஏழாம் வகுப்பு மாணவர்களிடம்…..

உண்மையில் 2015 உடன் மாலிங்ககுலசேகர யுகம் முடிந்து விட்டது. அது தொடக்கம் இலங்கைக்கு பந்துவீச்சுக்கு தலைமை ஏற்க சரியான ஒருவர் கிடைக்கவில்லை. 2017 செப்டெம்பர் தொடக்கம் 2018 செப்டெம்பர் வரை ஓர் ஆண்டு காலமாக மாலிக அணியில் இல்லாதபோது கூட அவ்வாறான ஒருவர் கிடைக்கவில்லை. குலசேகரவுடன் விடைபெறும் போட்டி பற்றி மாலிங்க இப்போது குறிப்பிடுகிறார். அதனை பிரியாவிடை என்பதை விட மீண்டும் ஒன்றிணைவது என்று அழைக்கலாம். அவர்கள் அதற்கு பொருத்தமானவர்கள் என்றாலும் இப்போது காலதாமதமாகிவிட்டது.  

இப்போது முன்னணியில் இருக்கும் சுரங்க லக்மால், நுவன் பிரதீப் மற்றும் இசுரு உதானவுக்கு தம்மை வளர்ப்பதற்கு போதுமான அவகாசம் வழங்கப்படுகிறதா? அதேபோன்று, எதிர்கால எதிர்பார்ப்புகளான துஷ்மன்த சமீர, லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித்த ஆகியோர் தமது திறமைகளை உண்மையில் வெளிக்காட்டி இருக்கின்றார்களா?. இந்த இரண்டு கேள்விகளுக்கும் எம்மால் விடைகாண முடியாதுள்ளது. ஏனென்றால் இந்த இரண்டு பிரச்சினைகளில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்ற கேள்விக்கும் பதிலில்லை.   

Photos : Sri Lanka vs West Indies | ICC Cricket World Cup 2019 – Match 39

ThePapare.com | 01/07/2019 Editing and re-using images without permission of ThePapare.com…

இலங்கைக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் இந்த நிலைமாற்றத்தை ஏனைய நாடுகள் கச்சிதமாக கையாள்கின்றன. மூத்த வீரர்கள் இளம் வீரர்களாக இருப்பினும் தமது திறமையை போதுமாக வெளிப்படுத்தாவிட்டால் எதிர்காலம் என்பது கேள்விக்குரியானது. 2023 இன் இலங்கை உலகக் கிண்ண குழாத்தில் மாலிங்க போன்ற ஒருவர் தலைமை வகிப்பாரா? அதுவரை லக்மால், பிரதீப் அல்லது உதான போன்றவர்கள் இருப்பார்களா

எல்லாம் சரியாக அமையும் என்று தெரியவில்லை. ஆனால், குலசேகரவுக்கு சிறந்த பிரியாவிடை ஒன்று கிடைக்குமா? (ஏனெனில் அவருக்கு மற்றொரு போட்டி கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை) மாலிங்கவுக்கு தனது அபார கிரிக்கெட் வாழ்வை முடிக்கும் நேரத்தில் பெரும் கௌரவத்துடன் அதற்கு விடைகொடுக்க வாய்ப்புக் கிடைக்குமா? அவர்களுக்கு ஒன்றாக தமது 100 ஆவது ஒருநாள் போட்டியில் ஆட வாய்ப்புக் கிட்டுமா? (ஆம், இருவரும் இணைந்து ஆடிய போட்டிகளின் எண்ணிக்கை 99) 

இலங்கையில் விருப்பத்திற்குரிய ஜோடியான சங்காமாலிங்க டாக்காவில் டி-20 கிரிக்கெட்டுக்கு விடைகெடுத்தது ஞாபகம் இருக்கிறதாஇதேபோன்று, அடுத்த ஆண்டில் மெல்போர்னில் வெற்றியுடன் இவர்களுக்கு விடைகொடுத்தால் எப்படி இருக்கும்?