கோல் மார்வல்ஸ் அணியில் இணையும் சகீப் அல் ஹஸன்!

Lanka T10 League 2024

101

இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா T10  தொடருக்காக கோல் மார்வல்ஸ் அணியில் பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரர் சகீப் அல் ஹஸன் விளையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லங்கா T10 தொடரில் விளையாடுவதற்கு வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துக்கொள்ள முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. 

அசத்தல் வெற்றியுடன் மே.இ.தீவுகள் T20 தொடரை சமநிலை செய்த இலங்கை

அதேநேரம் வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துக்கொள்வதுடன், அணிகளும் வரைவுக்கு முன்னதாக வீரர்களை அணியில் ஒப்பந்தம் செய்யமுடியும். 

அதன் அடிப்படையில் கோல் மார்வல்ஸ் அணி தங்களுடைய பிளாட்டினம் வீரராக சகீப் அல் ஹஸனை அணியில் இணைத்துள்ளது 

அதேநேரம் லங்கா T10 தொடரில் விளையாட ஆர்வமுடைய வீரர்கள் எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னர் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துக்கொள்ள முடியும். ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 17 வீரர்கள் ஒரு குழாத்தில் இடம்பெற முடியும். இதில் 6 வெளிநாட்டு வீரர்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

லங்கா T10 தொடரானது டிசம்பர் 12ம் திகதி முதல் 22ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<