Home Tamil கொழும்பு ஸ்டார்ஸை வீழ்த்தி குவாலிபையருக்கு முன்னேறிய தம்புள்ள ஜயண்ட்ஸ்

கொழும்பு ஸ்டார்ஸை வீழ்த்தி குவாலிபையருக்கு முன்னேறிய தம்புள்ள ஜயண்ட்ஸ்

Lanka Premier League 2021

241

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இன்று (19) நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ஜனித் லியனகேவின் மிகச்சிறந்த துடுப்பாட்ட பங்களிப்பின் உதவியுடன், தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிகள் மோதியிருந்தன.

>>LPL பிளே-ஓஃப் போட்டிகளுக்கான நேர அட்டவணையில் மாற்றம்!

இதில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி குசல் பெரேரா மற்றும் டொம் பெண்டன் ஆகியோரது விக்கெட்டுகளை ஆரம்பத்தில் இழந்த போதும், பெதும் நிஸ்ஸங்கவின் நிதானமான ஆட்டத்துடன், ஓட்டங்களை குவிக்க தொடங்கியது.

பெதும் நிஸ்ஸங்கவுடன் 42 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டத்தை பெற்ற, தனன்ஜய டி சில்வா 15 ஓட்டங்களுடன் வெளியேற, அஞ்செலோ மெதிவ்ஸ் வேகமாக ஓட்டங்களை குவித்தார். சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடிய பெதும் நிஸ்ஸங்க  42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சீகுகே பிரசன்ன இந்த போட்டியில், 11 பந்துகளுக்கு 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஏமாற்றமளித்தார்.

ஒருகட்டத்தில் 150 ஓட்டங்களை பெறுவதற்கான வாய்ப்பிருந்த போதும், அஞ்செலோ மெதிவ்ஸ் மாத்திரம் 34 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் இம்ரான் தாஹீர் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிசார்பாக அணித்தலைவர் நிரோஷன் டிக்வெல்ல முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினார். இந்த போட்டியில் தசுன் ஷானக உபாதை காரணமாக விளையாடாத நிலையில், தலைமை பொறுப்பை ஏற்றிருந்த டிக்வெல்லவின் ஆட்டமிழப்பு அணிக்கு பின்னடைவை கொடுத்தது.

இதனைத்தொடர்ந்து இன்றைய போட்டியில் களமிறங்கியிருந்த சந்துன் வீரகொடி 10 ஓட்டங்களுன் வெளியேறினார். எனினும், மூன்றாவது விக்கெட்டுக்காக பில் சோல்ட் மற்றும் இளம் வீரர் ஜனித் லியனகே ஆகியோர் 48 ஓட்டங்களை இணைப்பாட்டமாக குவித்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

எனினும், பில் சோல்ட் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, போட்டி இரண்டு அணிகளுக்கும் சாதகத்தை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், நஜிபுல்லாஹ் ஷட்ரான் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, லியனகே நிதானமான இன்னிங்ஸ் ஒன்றை கட்டியெழுப்பினார். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 61 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.

இறுதியாக, சாமிக்க கருணாரத்ன 10 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஜனித் லியனகே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் மீதமிருக்க 18.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

இதன் மூலமாக இந்த போட்டியில் மிகச்சிறந்த வெற்றியினை பதிவுசெய்த தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளதுடன், கொழும்பு ஸ்டார்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இந்தநிலையில், இன்றைய தினம் நடைபெறவுள்ள கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிபையர் போட்டியில், தோல்வியடையும் அணியுடன், இரண்டாவது குவாலிபையர் போட்டியில் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<


Result


Colombo Stars
145/6 (20)

Dambulla Aura
146/4 (18.5)

Batsmen R B 4s 6s SR
Kusal Perera c & b 3 6 0 0 50.00
Tom Banton run out () 13 13 0 0 100.00
Pathum Nissanka c & b 42 39 0 0 107.69
Dhananjaya de Silva b 15 11 0 0 136.36
Angelo Mathews not out 50 34 0 0 147.06
Seekkuge Prasanna c & b 7 11 0 0 63.64
Dinesh Chandimal c & b 2 3 0 0 66.67
Karim Sadiq not out 11 3 0 0 366.67


Extras 2 (b 1 , lb 0 , nb 0, w 1, pen 0)
Total 145/6 (20 Overs, RR: 7.25)
Bowling O M R W Econ
Josh Little 4 0 24 0 6.00
Nuwan Pradeep 4 0 23 2 5.75
Chamika Karunaratne 4 0 31 1 7.75
Imran Tahir 4 0 25 2 6.25
Sachitha Jayathilake 4 0 41 0 10.25


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c & b 0 1 0 0 0.00
Phil Salt c & b 32 21 0 0 152.38
Sandun Weerakkody st b 10 11 0 0 90.91
Janith Liyanage not out 56 47 0 0 119.15
Najibullah Zadran c & b 34 28 0 0 121.43
Chamika Karunaratne not out 10 5 0 0 200.00


Extras 4 (b 1 , lb 1 , nb 0, w 2, pen 0)
Total 146/4 (18.5 Overs, RR: 7.75)
Bowling O M R W Econ
Dushmantha Chameera 4 0 21 1 5.25
Naveen Ul Haq 4 0 26 1 6.50
Seekkuge Prasanna 4 0 36 1 9.00
Jeffrey Vandersay 4 0 34 1 8.50
Karim Sadiq 2.5 0 24 0 9.60